தமிழகம்

img

பாடத்திட்டக் குறைப்பு: அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை:
பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டக் குறைப்பு, பள்ளிகளில் சுழற்சி முறை வகுப்புகள் குறித்த தனது பரிந்துரையை வல்லுநர்குழு ஒருவாரத்துக்குள் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைக்க பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவில் ஏற்கனவே 12 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்தக் குழு மே 29ஆம் தேதி தனது பரிந்துரைகளை அளிக்க அறிவுறுத்தப் பட்டிருந்தது. ஆனால், அந்தகுழு பரிந்துரைகளை அளிக்கவில்லை.  இந்நிலையில் குழுவில் மேலும் 4 உறுப்பினர்கள் தேவை என்ற பள்ளிக்கல்வி ஆணையரின் கோரிக்கையை ஏற்று கல்வியாளர்கள் உள்ளிட்ட மேலும் 4 பேரை உறுப்பினர்களாக நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. குழு தனது பரிந்துரைகளை அளிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

;