திங்கள், ஆகஸ்ட் 3, 2020

தமிழகம்

img

தமிழகத்தில் மேலும் 4,549 பேருக்கு கொரோனா தொற்று...  ஒரே நாளில் 5,106 பேர் குணமடைந்தனர்...

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நகரப் பகுதியில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ், தற்போது கிராம பகுதியிலும் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இதனால் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களும் பதற்றமான சூழ்நிலையில் பொழுதை போக்கி வருகின்றனர். 

இந்நிலையில் தமிழகத்தில் இன்று (வியாழன்) மேலும் 4,549 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 1,56,369 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  கடந்த 24 மணிநேரத்தில் 69 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருந்த 5,106 பேர் குணமடைந்த நிலையில், தமிழகத்தில் கொரோனாவை வென்றவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07, 416 ஆக உயர்ந்துள்ளது.  

;