கல்வி

img

உயர்நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கு வேலை

தில்லி உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணிக்கு 132 பேர் தேவைப்படுகின்றனர். எனவே, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Jr.Judicial Assistant/Restorer Group “C”

காலியிடங்கள்: 132

சம்பளம்: 7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.

வயது: 18 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப் படிப்பை முடித்து நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வில் Emglish Language, General Awarness, Current Affairs, General Intelligence, Reasoning & Numerical Ability ஆகிய பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் தட்டச்சு தேர்விற்கு அழைக்கப்படுவர். தட்டச்சு தேர்வில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் வீதம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு பற்றிய விபரம் சம்பந்தபட்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தேர்வு கட்டணம்: ரூ.600. (அருந்ததியர், விதவை பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு மட்டும் ரூ. 300) கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.delhihighcourt.nic.in என்ற இணையதளம் மூலம் 11.3.2020 தேதிக்கும் முன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

;