world

img

இந்தியாவுக்கு 500% வரி விதிக்க அமெரிக்கா திட்டம்!

ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவிகிதம் வரி விதிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது தொடர்பான மசோதாவை செனட்டில் முன்மொழிந்து, வாக்கெடுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்று டிரம்ப் தன்னிடம் கூறியதாகவும் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவை பொருளாதார ரீதியில் தாக்கும் விதமாக அமெரிக்கா இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.