பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் அதிர்ச்சி தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜுவரேவ்
30 May 2026, 9:27 pm

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் அதிர்ச்சி தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜுவரேவ்

களிமண் தரையில் நடை பெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் 96ஆவது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் சனியன்று நடை பெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 2 ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜுவரேவ், தரவரிசையில் இல்லாத பிரான்சின் ஹாலிஸை எதிர் கொண்டார்.

இந்த போட்டி சின்னர், ஜோகோ விச்சின் அதிர்ச்சி தோல்வியின் ஆட்டங் கள் போன்றே நகர்ந்தது.

ஆனால் ஜுவரேவ் சுதாரித்துக்கொண்டு வெற்றி யை தான் பக்கம் வசப்படுத்தினார்.

அதாவது இந்த ஆட்டத்தின் முதல் 2 செட்களை 6-4, 6-3 என்ற கணக்கில் ஜுவரேவ் கைப்பற்றினார்.

ஆனால் 3ஆவது செட்டை 7-5 என்ற கணக்கில் ஹாலிஸ் கைப்பற்றினார். இதனால் இந்த ஆட்டம் பரபரப்பானது.

சின்னர், ஜோகோவிச் போல ஆகிவிடுமோ என ரசிகர்கள் இருக்கையை விட்டு எழாமல் அப்படியே அமர்ந்து இருந்தனர். மைதானம் அமைதியானது.

எனினும் பாய்ச்சல் வேகத்தில் புள்ளிகளை குவிக்க ஆரம்பித்த ஜுவரேவ் 4ஆவது செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி னார்.

இறுதியில் 6-4, 6-3, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் ஜுவரேவ் அபார வெற்றி பெற்று 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் அதிர்ச்சி தோல்விகளுக்கு ஜுவரேவ் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

இதே பிரிவில் இத்தாலியின் கோபோலி, அமெரிக்கா வின் வத்ஜா ஆகியோரும் 4ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஒசாகா அபாரம் மகளிர் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 16 ஆவது இடத்தில் உள்ள ஜப்பானின் ஒசாகா, 17ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜோவிச்சை எதிர் கொண்டார்.

மிக பரபரப்பாக நடை பெற்ற இந்த ஆட்டத்தில் ஒசாகா 7-6 (7-5), 6-7 (3-7), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

அதே போல தர வரிசையில் 11ஆவது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் பென்கிச் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் தரவரிசையில் இல்லாத அமெரிக்காவின் பெய்டா னை வீழ்த்தி, 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.