ஜிம்பாப்வே படகு விபத்து : 44 பேர் பலி
12 Aug 2026, 9:11 pm

ஜிம்பாப்வே படகு விபத்து : 44 பேர் பலி

ஜிம்பாப்வேயில் உள்ள ஏரி ஒன்றில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை குறைந்தது 44 ஆக உயர்ந்துள்ளது. சாம்பியா நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள கரிபாஏரியில் 90நபர்கள் மட்டுமேபயணிக்க வேண்டிய அப்படகில் 120 பேர் பயணித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பயணிகளை ஏற்றிச்சென்றதே படகு கவிழ்ந்ததற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுவரை67 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது எனவும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.