'ஜீரோ பிஜேபி' இயக்கத்தின் அதிரடி முழக்கம்!
11 Apr 2026, 5:30 am

'ஜீரோ பிஜேபி' இயக்கத்தின் அதிரடி முழக்கம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் முன் னெப்போதும் இல்லாத வகையில் அர சியல் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலை யில், “தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவிடக் கூடாது” என்ற ஒற்றை இலக்குடன், சமூக ஆர்வலர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் ஒன்றி ணைந்து ‘ஜீரோ பிஜேபி’ (Zero BJP) என்ற புதிய பிரச்சார இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் வியாழனன்று நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பில், நாட்டின் அரசமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையைக் காக்க இந்தத் தேர்தலில் பாஜகவைத் துடைத்தெறிய வேண்டும் என அறைகூவல் விடுக்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்திற்கு விடப்பட்ட சவால்: பரக்கலா பிரபாகர் எச்சரிக்கை இதில் பங்கேற்று பேசிய புகழ்பெற்ற பொரு ளாதார வல்லுநரும் சமூக ஆர்வலருமான பரக்கலா பிரபாகர், தேர்தல் முறைகேடுகள் மற்றும் ஜனநா யகச் சீரழிவு குறித்துக் கடுமையான எச்சரிக்கை களை முன்வைத்தார். “கடந்த தேர்தல்களில் சில மாநிலங்களில் (ஆந்திரா உட்பட) ஒரு நிமிடத்திற்கு மூன்று வாக்கு கள் வீதம், அதாவது ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு வாக்கு என்ற அடிப்படையில் வாக்குகள் பதிவாகி யுள்ளன.

இது கற்பனை செய்ய முடியாத வெற்றிக ளையும், நம்பமுடியாத தோல்விகளையும் உரு வாக்கியுள்ளது. இத்தகைய முறைகேடான திட்டங்கள் தமிழகத்திலும் திட்டமிடப்படக்கூடும் என்பதால் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தமிழகத் தேர்தல் என்பது வெறும் மாநிலத் தேர்தல் மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் மிக முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது. அதனால்தான் நான் இங்கு வந்துள்ளேன்” என்று அவர் தனது உரையைத் தொடங்கினார்.

மேலும், இந்திய அரசின் அதிகாரப்பூர்வ விழாக்க ளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் ஆறு சரணங்களை யும் கட்டாயமாகப் பாட வேண்டும் என்ற சமீபத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை குறித்துப் பேசிய அவர், “இது மத அடையாளங்களை மெல்ல மெல்ல அரசு அடையாளங்களாக மாற்றும் ஒரு நுணுக்கமான முயற்சி.

இன்று செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏறுகிறது; ஆனால் பாஜகவின் இத்தகைய போக்குகள் தொடர்ந்தால், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று அங்கு எந்த மாதிரி யான கொடி ஏறும் என்ற பெரிய கேள்விக்குறி நம் முன்னே நிற்கிறது. இத்தகைய சந்திப்புகளை நடத்துவதே வரும் காலங்களில் இயலாத ஒன்றாக மாற்றப்படலாம்,” என அவர் கவலை தெரிவித்தார்.

பாஜகவிற்கு அளிக்கும் வாக்கு: விழுமியங்களுக்கு விடுக்கப்படும் மரண அடி! பரக்கலா பிரபாகர் மேலும் பேசுகையில், பாஜக விற்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உன்னதமான விழுமியங்களுக்கு விடுக்கப்படும் இறுதி அச்சுறுத் தல் என்று மிக விரிவாக விவரித்தார். “பாஜகவிற்கு அளிக்கப்படும் வாக்கு என்பது நாட்டின் நல்லிணக்கம், மொழியியல் மற்றும் பிராந்திய ஒற்றுமை ஆகியவற்றின் மீது நடத்தப் படும் தாக்குதலாகும்.

அது சமூக நீதிக்கும், பன்முகத் தன்மைக்கும் வைக்கும் கொள்ளி. நாம் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், எப்படிப் பேச வேண்டும், எந்த மொழியைப் படிக்க வேண்டும் என்ற நம்முடைய அடிப்படை உரிமை களை அது முற்றிலுமாகப் பறித்துவிடும்.

குறிப்பா கத் தமிழர்களுக்கு மிக நெருக்கமான மொழியியல் மற்றும் கலாச்சார அடையாளங்களை இது சிதைக்கும். பாஜகவின் வெற்றி என்பது கூட்டாட்சித் தத்துவத்தின் (Federalism) அரசியல் மற்றும் நிதி சார்ந்த ஆன்மாவை அழிக்கும் செயல்” என்று அவர் எச்சரித்தார். அவர் தனது பேட்டியின் இறுதியில், “தமிழக மக்கள் வெறும் பாஜகவை மட்டும் எதிர்கொள்ள வில்லை; அவர்கள் பாஜக, இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் அனைத்து மத்திய அமலாக்க முகமைகளின் ஒருங்கிணைந்த அதிகாரத்தையும் சேர்த்தே எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இது ஒரு சமமான அரசியல் போட்டி அல்ல; இது ஒரு சித்தாந்தப் போர். எனவே, விஷ சக்திகள் தமிழக சட்டமன்றத்திற்குள் நுழையாதபடி மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்,” என்று அறை கூவல் விடுத்தார். நீதித்துறையின் தன்னாட்சியும் ஜனநாயகச் சரிவும்: நீதிபதி ஹரி பரந்தாமன் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் தனது உரையில், ஜனநாயகத் தூண்களாகக் கருதப் படும் நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் ஆகிய வற்றின் தற்போதைய நிலையை மிகக் கடுமை யாக விமர்சித்தார்.

“தமிழகத்தின் அரசியல் மாடல் என்பது 1967 முதல் ஒரு தனித்துவமான திசையில் பயணித்து வருகிறது. ஆனால், 2014-க்குப் பிறகு நிலைமை மோசமடைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை நூறைத் தாண்டியுள்ளது, எல்பிஜி சிலிண்டர் ஆயிரம் ரூபாயைத் தொட்டுள்ளது, தங்கம் விலை விண்ணைத் தொடுகிறது. பொருளாதார ரீதியாக மக்களை வதைக்கும் அதே வேளையில், பாஜக அனைத்துத் தன்னாட்சி அமைப்புகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது,” என்றார்.

நீதித்துறை குறித்துப் பேசிய அவர், “இந்திய வரலாற்றில் எப்போதும் இல்லாத வகை யில் உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் செய்தியாளர்களைச் சந்தித்து, அன்றைய தலைமை நீதிபதி ஒன்றிய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினர். அதேபோல், தேர்தல் ஆணையத்தின் மீதே நம்பிக்கையில்லாத் தீர்மானம் (Impeachment) கொண்டு வரும் அளவிற்குச் சூழல் நிலவியது. ஜம்மு - காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்து யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட நிலையில், அது மீண்டும் எப்போது மாநில அந்தஸ்தைப் பெறும் என்பதே தெரிய வில்லை.

தன்னாட்சி அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்படாத வரை ஜனநாயகம் ஊசலாடிக் கொண்டுதான் இருக்கும்” என்று அவர் சுட்டிக் காட்டினார். கிருமிகளை வடிகட்டும் ‘ஜீரோ பி’ பில்டர்: பத்திரிகையாளர் விஜயசங்கர் மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கர் தனது பேட்டியில், அரசியல் மாற்றத்தை விடச் சமூக மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.

“வீடுகளில் கிருமிகளை வடிகட்ட ‘Zero B’ பில்டரை பயன்படுத்துவது போல, தமிழகத்தில் பாஜக என்ற மதவாதக் கிருமி பரவாமல் தடுக்க இந்தச் சமூக ஆர்வலர்களின் இயக்கம் ஒரு வடிகட்டியாகச் செயல்பட வேண்டும். 2021 தேர்தலிலேயே தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ‘மோடி அலை’யைத் தடுத்து நிறுத்தின. அதனால்தான் இந்த மாநிலங்கள் மீது இன்று பலமுனைத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன” என்றார். தேர்தல் வெற்றி மட்டுமே தீர்வாகாது என்று குறிப் பிட்ட அவர், “பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சமூகத்தின் அடிவேர் வரை ஊடுருவியுள்ளனர். அவர்கள் தண்ணீரிலும் மண்ணிலும் கலந்தி ருக்கும் கிருமிகளைப் போன்றவர்கள்.

தேர்தல் முடிந்தவுடன் நாம் கொண்டாட்டங்களில் மூழ்கிவிடு கிறோம், ஆனால் அந்தக் கிருமிகள் அடியில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும். அதை எதிர்கொள்ள மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இன்று வட இந்திய ஊடகங்கள் பல ‘சுய தணிக்கை’ (Self-censorship) செய்து கொள்கின்றன.

எமர்ஜென்சி காலத்தில் அத்வானி சொன்னது போல, ஊடகங்கள் இன்று அதிகாரத்தின் முன் தவழ்ந்து செல்கின்றன. எதையெல்லாம் மறைக்க வேண்டும் என்பதுதான் இன்றைய ஊடகங்களின் கவலை யாக இருக்கிறது. குஜராத் மாடல் போன்ற போலி பிம்பங்களைத் திரை போட்டு மறைக்கும் ஊடகங்களின் போக்கினை நாம் முறியடிக்க வேண்டும்” என்று அவர் விரிவாகப் பேசினார்.

தமிழகத்தின் மூன்று முழக்கங்கள்: அமைச்சர் மனோ தங்கராஜ் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், இந்த இயக்கத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசுகை யில், சாதி, மத ரீதியாக மக்களைப் பிரிக்கும் சூழ்ச்சி யை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தினார். “அகில இந்திய அளவில் பாஜகவிற்குப் பெரும் சவாலாக இருப்பது தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள்தான். இங்கு குறுக்கு வழியில் ஊடுருவ மதவெறி அமைப்பு கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. நாம் நீண்டகாலமாகப் போராடி ஒழித்த சாதி மற்றும் மத வெறியை மீண்டும் கிளப்பி மக்களைப் பிரிக்க அவர்கள் திட்டமிடுகிறார்கள்,” என்றார். இந்தத் தருணத்தில் சிவில் சமூகத் தலை வர்கள் இணைந்து முன்வைக்கும் மூன்று முக்கிய முழக்கங்களை அவர் சுட்டிக்காட்டினார்: 1. தேசத்தின் அரசமைப்புச் சட்டத்தைப் பாது காப்போம்! (Protect Constitution) 2.

நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்! (Protect Nature) 3. நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்! (Protect Future) “அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த அரசமைப்புச் சட்டத்தையும் மக்களாட்சித் தத்து வத்தையும் காக்க, தமிழக வாக்காளர்கள் பாஜகவை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும். ‘ஜீரோ பிஜேபி’ என்ற இந்தப் பிரச்சாரம் தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்று, ஒரு தொகுதியில் கூட அவர்கள் வெற்றி பெறவில்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் நிறைவு செய்தார்.

தமிழகத்தின் அரசியல் மற்றும் கலாச்சாரத் தனித்துவத்தைப் பாதுகாக்கவும், இந்திய ஜன நாயகத்தின் அடிப்படைத் தூண்களைச் சீர்குலை வில் இருந்து மீட்கவும் ‘ஜீரோ பிஜேபி’ இயக்கம் ஒரு தார்மீகப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. சிவில் சமூகத் தலைவர்கள் ஒன்றிணைந்து முன்னெ டுக்கும் இந்தப் பிரச்சாரம், வெறும் தேர்தல் வெற்றிக் கானது மட்டுமல்ல; இது இந்தியத் திருநாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைக் காப்பதற்கான ஒரு பெரும் அறப்போர் என்றால் மிகையல்ல!