தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

17 பேருக்கு மீண்டும் வேலை கேட்டு செப்டோ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - கைது

8 Oct 2026, 12:30 am
17 பேருக்கு  மீண்டும்  வேலை  கேட்டு செப்டோ  ஊழியர்கள்  ஆர்ப்பாட்டம் - கைது

17 பேருக்கு மீண்டும் வேலை கேட்டு செப்டோ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - கைது

சென்னை, அக். 7 -பணிநீக்கம் செய்யப்பட்ட 17 ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய செப்டோ ஊழியர்களைகாவல்துறையினர் கைது செய்தனர்.மளிகைப் பொருட்கள், காய்கறிகளை வாடிக்க்கையாளர்களின் வீடுகளுக்கு 10 நிமிடத்தில் விநியோகம் செய்யும் ஆன்லைன் நிறுவனம் செப்டோ.

வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள இந்த நிறுவனம் ஆங்காங்கே சிறிய கிடங்குகளைப் வைத்து துரிதமாக விநியோகம் செய்துகிறது.சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலகம்மற்றும் கிடங்குகள் உள்ளன. ஆன்லைன் ஆர்டர்களை அந்தந்தப்பகுதி அலுவலங்களில் இருந்து எடுத்துச் சென்று இருச்சக்கர வாகனத்தில் மூலம் விநியோகிப்பாளர்கள் விநியோகம் செய்கின்றனர். இவர்களை நிர்வாகம் ஊழியர்களாக கருதுவதில்லை. ‘ஒர்கிங் பார்ட்னர்’ என்ற பெயரில் ஆர்டருக்கு ஏற்ப கமிஷன் மட்டும் வழங்கி வருகிறது.திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகம் அருகில் செப்டோ நிறுவனத்தின் கிளை அலுவலத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிர்வாகம் கமிஷன் தொகை குறைத்துள்ளது. இதனை எதிர்த்து 120 ஊழியர்கள்வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 17 பேரை நிர்வாகம் (ஐடி-யைபிளாக் செய்து) வேலையை விட்டு நீக்கியது.

இந்நிலையில், தமிழ்நாடு உணவு மற்றும் இதரபொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கம்(சிஐடியு) நிர்வாகத்துடன்நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து செப்.30 அன்று நிறுவனம் முன்பு போராட்டம் நடத்தச் சென்றவர்களை காவல்துறை கைது செய்தது.இதன் தொடர்ச்சியாக புதனன்று (அக்.7) திருவான்மியூர் செப்டோ அலுவலகம் முன்பு சங்கத்தின் தலைவர் கே.சி.கோபிகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய தொழிலாளர் சட்டங்கள் தங்களுக்கு பொருந்தாது. எனவே, தொழிலாளர்களை மீண்டும்வேலைக்கு எடுக்க முடியாதுஎன்று மறுக்கின்றனர். இதனை கண்டித்து போராட்டம் நடைபெறுகிறது” என்றார்.

சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செந்தில்குமார், பொருளாளர் நடராஜன், மாநிலச் செயலாளர் அழகுநம்பி வெல்கின், சங்கத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணா, பொருளாளர் முருகன், இந்திய ஜனநாயகவாலிபர் சங்க முன்னாள் தலைவர் எஸ்.முகமது ரஃபி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.