பாலஸ்தீன போராட்டம் தொடர்பாக தவறான செய்தி ‘ஜீ நியூஸ்’ தொலைக்காட்சிக்கு ரூ. 2 லட்சம் அபராதம்
yesterday

பாலஸ்தீன போராட்டம் தொடர்பாக தவறான செய்தி ‘ஜீ நியூஸ்’ தொலைக்காட்சிக்கு ரூ. 2 லட்சம் அபராதம்

உத்தரப்பிரதேச மாநிலத்தின்அலிகாரில் உள்ளது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம். இங்கு ஆகஸ்ட் 12 அன்று கட்டண உயர்வைக் கண்டித்தும், மாணவர் பேரவையை மீண்டும் கொண்டுவரவலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டம் மிகவும் அமைதியாக நடைபெற்றது. பாலஸ்தீனம் தொடர்பாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த போராட்டத்தின் போது எழுப்பப்பட்ட முழக்கங்களின் 10 முதல் 15 வினாடிகள் கொண்ட சில குறிப்பிட்ட காட்சிகளை மட்டும் ‘ஜீ நியூஸ்’ ஒளிபரப்பியது. அதில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மாணவர்கள் தெரிவித்த ஒற்றுமையை “குற்றவியல் அல்லது தேசத்துரோகச் செயல்” போலச்சித்தரித்தது ஒரு செய்தி தொகுப்பை வெளியிட்டது. அதாவது உண்மைக்குப் புறம்பாக அவதூறு பரப்பியது.

இதுதொடர்பாக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான தல்ஹா மன்னான் செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தரநிலைகள் ஆணையத்திடம் (என்பிடிஎஸ்ஏ) புகார் அளித்தார். ஒரு மாத விசாரணைக்குப்பிறகு என்பிடிஎஸ்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,”அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் போராட்டம் தொடர்பான ‘ஜீ நியூஸ்’தொலைக்காட்சியின் வார்த்தை நடுநிலையான செய்தி அறிக்கை என்று கூற முடியாது.

அது வன்முறையைத் தூண்டும்வகையில் அமைந்துள்ளது. இதனால்சர்ச்சைக்குரிய இந்தக் காணொளிகளைத் தனது வலைத்தளம், யூடியூப் மற்றும் இதர தளங்களிலிருந்துஉடனடியாக அகற்று வேண்டும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ‘ஜீ நியூஸ்’ செய்தித் தொலைக்காட்சிக்கு ரூ. 2லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது” என்பிடிஎஸ்ஏ உத்தரவிட்டுள்ளது.