ஆந்திராவில் எஸ்ஐஆர் பணி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக நடத்தப்படுகிறது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு
28 Jun 2026, 9:58 pm

ஆந்திராவில் எஸ்ஐஆர் பணி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக நடத்தப்படுகிறது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

அமராவதி நாடு முழுவதும் 3ஆம் கட்ட வாக்கா ளர் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தில்லி, பஞ்சாப் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் ஜூன் 14 அன்று (மாநிலத்திற்கு ஏற்ப தொடக்க தேதி) தொடங்கியது. இந்த எஸ்ஐஆர் பணியில் ஒட்டுமொத்தமாக 36.73 கோடி வாக்காளர்களின் விவரங்கள் சரிபார்க்கப் பட உள்ளன. சுமார் 3.94 லட்சம் வாக்குச் சாவடி நிலை அதிகாரிகளும், அவர்க ளுக்கு உதவியாக அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட 3.42 லட்சம் முகவர்களும் வீடு வீடாகச் சென்று சரிபார்ப்புப் பணி களை மேற்கொன்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக நடைபெற்று வரு வதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குற் றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் காகனி கோவர்தன் ரெட்டி கூறு கையில்,”ஆந்திர மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஆளும் கூட்டணிக் கட்சிகளின் தலையீடு அதிகமாக உள்ளது. எஸ்ஐஆர் தொடர்பாக அமைச்சர் பி. நாராயணா, வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இதனை எப்படி ஏற்க முடியும். வாக்காளர் பட்டி யல் திருத்தப் பணியானது எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் வாக்கா ளர்களையும் பட்டியலில் இருந்து நீக்குவ தற்காகப் பயன்படுத்தப்படக் கூடாது என் பதே விதி. ஆனால் ஆந்திர மாநிலத்தில் எல்லாம் தலைக்கீழாக நடைபெறுகிறது. இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு வேடிக்கை பார்க்க மாட்டோம்” என அவர் குற்றம்சாட்டினார்.

ஆந்திரா முழுவதும் உள்ள 4.16 கோடி வாக்காளர்களைக் குறிவைத்து இந்த 3ஆம் கட்டத் திருத்தம் நடைபெறு கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 46,397 பேர் களப்பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.