முந்தய பக்கம்

யூ டியூபர் மாரிதாஸ் கைது!

8 Jun 2026, 9:02 pm
யூ டியூபர் மாரிதாஸ் கைது!
<p><strong>யூ டியூபர் மாரிதாஸ் கைது!</strong></p><p>சென்னை, ஜூன் 8 - மதுரை கோ. புதூர் அருகிலுள்ள சூர்யா நகரில் வசித்து வருபவர் பிரபல யூ டியூபர் மாரிதாஸ். பாஜக ஆதர வாளரான இவர், விஜய் தலைமை யிலான தவெக அரசு மற்றும் அமைச்சர் களின் நடவடிக்கைகளை விமர்சித்து, தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். </p><p>இதுகுறித்து, தவெக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சென்னை சைபர் கிரைம் தனிப்படையின ரும் மதுரை மாநகர காவல்துறையினரும் இணைந்து மாரிதாஸை திங்கட்கிழ மையன்று அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கும் அழைத்து வந்தனர். தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து ஏஐ புகைப்படத்தை வெளியிட்டு அவதூறு பரப்பியதால் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram