தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

4 Apr 2026, 4:02 pm
சென்னை விரைவு செய்திகள்

வேட்புமனுவில் இ-மெயில் முகவரி கட்டாயம்:  தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை, ஏப்.4- தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் உறுதிமொழிப் பத்திரத்தில் இ-மெயில் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாகக் குறிப்பிட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், சொத்து விவரங்கள், குற்றப் பின்னணி, கல்வித் தகுதி, பான் கார்டு மற்றும் சமூக ஊடகக் கணக்குகளுடன் மின்னஞ்சல் முகவரியையும் சமர்ப்பிப்பது சட்டப்பூர்வ கடமையாக்கப்பட்டுள்ளது. உறுதிமொழிப் பத்திரத்தில் ஏதேனும் ஒரு பகுதி காலியாக இருந்தால், சம்பந்தப்பட்ட வேட்பாளருக்குத் தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ் வழங்குவார். அந்த நோட்டீஸைப் பெற்ற பிறகும் முழுமையான விவரங்களுடன் திருத்தப்பட்ட பத்திரத்தைத் தாக்கல் செய்யத் தவறினால், பரிசீலனையின் போது அந்த வேட்புமனு நிராகரிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. வரும் திங்கட்கிழமையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைவதால், அரசியல் கட்சியினர் இந்த விவரங்களைச் சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள சுங்க அலுவலகத்தில் வேலை அறிவிப்பு

சென்னை, ஏப்.4- சென்னையில் உள்ள மத்திய சுங்கத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் டிரேட்ஸ்மேன் (2 இடங்கள்) பணிக்கு ஐடிஐ முடித்து ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மாலுமி (6 இடங்கள்) மற்றும் எந்திர எண்ணெய் பராமரிப்பாளர் (2 இடங்கள்) பணிகளுக்கு 10-ஆம் வகுப்புடன் மூன்று ஆண்டுகள் கடற்பயண இயந்திரப் பராமரிப்பு அனுபவம் அவசியம். விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்; அரசு விதிமுறைப்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு. தேர்வு செய்யப்படுபவர்களுக்குப் பணியைப் பொறுத்து மாதம் ரூ.18ஆயிரம் முதல் ரூ.63,200 வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் chennaicustoms.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த படிவத்தை உரிய ஆவணங்களுடன் “கூடுதல் சுங்க ஆணையர் (நிர்வாகம்), சென்னை - 600001” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 30.04.2026 ஆகும்.

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி  சென்னையில் தீவிர விழிப்புணர்வு

சென்னை, ஏப். 4- சென்னையில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் தலைமையில் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்குப் பின் சென்னையில் வாக்காளர் எண்ணிக்கை 28 லட்சமாகக் குறைந்துள்ள நிலையில், வாக்குப்பதிவு சதவீதம் குறையாமல் இருக்க சென்ட்ரல் மெட்ரோ, மெரினா கடற்கரை, அண்ணா நகர் டவர் பூங்கா மற்றும் வடபழனி மால் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரப் பலகைகள் மூலம் பிரசாரம் செய்யப்படுகிறது. குறிப்பாக, சனிக்கிழமையன்று காலை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் வாயிலாக ஏப்ரல் 23-ஆம் தேதி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கிணற்றில் மூழ்கி பாட்டி, பேரன், பேத்தி பலி

மதுராந்தகம், ஏப். 4-  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்த ருத்திரகுமாரின் மனைவி சாந்தி (65), சனிக்கிழமையன்று தனது பேரன் தஷ்வந்த் (13) மற்றும் பேத்தி கௌசிகா (11) ஆகியோருடன் துணி துவைப்பதற்காக அருகில் உள்ள கிணற்றிற்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்த குழந்தைகளைக் காப்பாற்ற முயன்ற பாட்டி சாந்தியும் தண்ணீரில் மூழ்கினார். இந்த விபத்தில் மூவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த மதுராந்தகம் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர், மூவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கம் விலை உயர்வு

சென்னை, ஏப்.4- தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5,800 உயர்ந்த நிலையில், மேலும் ரூ.800 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.255 மற்றும் ஒரு கிலோ ரூ.2,55,000 என்ற அளவிலேயே இன்றும் நீடிக்கிறது.

ஐஓசி தென்மண்டல செயல் இயக்குநராக வி.சி. அசோகன் பொறுப்பேற்பு

சென்னை, ஏப்.4- இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்  நிறுவனத்தின் தென்மண்டல செயல் இயக்குநராகவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத் தலைவராகவும் வி.சி. அசோகன்  புதனன்று பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், அவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில எண்ணெய் நிறு வனங்களின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றுவார். முன்னதாக, மும்பையில் உள்ள இந்தியன் ஆயில் தலைமையகத்தில் அகில இந்திய சில்லறை விற்பனைப் பிரிவின் தலைவராகவும், இலங்கையில் உள்ள லங்கா ஐஓசி நிறுவனத்தில் விற்பனைப் பிரிவுத் துணைத் தலை வராகவும் அவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.

மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் பெண் படுகாயம்

சென்னை, ஏப்.4- வடபழனி 100 அடி சாலையில் வியாழக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற கிருத்திகா (41) என்பவரது கழுத்தை, காற்றில் பறந்து வந்த தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் அறுத்ததில் அவர் படுகாய மடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளார். இதுகுறித்து அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் ஒரு சம்பவம்  மதுரவாயல் மேம்பாலத்தில் சிலநாட்களுக்கு முன்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய ‘அபெக்ஸ்’ மாடல் அறிமுகம்

சென்னை, ஏப்.4-  முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டான ஐக்யூஓஓ தனது புகழ்பெற்ற ‘ஐக்யூஓஓ 15’ மாடலில் புதிய ‘அபெக்ஸ்’ பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. உயர்தர வடிவமைப்பு மற்றும் செயல்திறனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், சந்தையின் மிகச்சிறந்த ‘சாம்சங் 2கே எம்14 ஓஎல்இடி’ திரையைக் கொண்டுள்ளது. இது வழக்கமான திரைகளை விட கூடுதல் தெளிவு, துல்லியமான நிறங்கள் மற்றும் நுணுக்கமான விவரங்களை வழங்குகிறது.

பக்கிங்காம் கால்வாயில் விதிமீறல்: கட்டுமானங்களைத் தடுக்க கோரிக்கை

செங்கல்பட்டு, ஏப்.4-  செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தேசிய நீர்வழிச் சாலை-4 (பக்கிங்காம் கால்வாய்) பகுதியில், உள்நாட்டு நீர்வழி ஆணையத்தின் அனுமதியின்றி சட்டவிரோத கட்டுமானங்கள் நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது. மாநில நீர்வளத் துறை செயல்படுத்தும் கோவளம் துணை வடிநில நீர்த்தேக்கத் திட்டத்திற்காக, முறையான அனு மதியின்றி கால்வாயின் குறுக்கே கான்கிரீட் கட்டு மானங்கள் மற்றும் கரைகள் அமைக்கப்படுவதாகவும், இதனால் நீரோட்டம் பாதிக்கப்பட்டு மணல் திட்டுகள் உரு வாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2016-ஆம் ஆண்டு சட்டப்படி இது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்வழி என்பதால், உரிய தொழில்நுட்ப அனுமதியின்றி நடைபெறும் இப்பணிகளை உடனடியாக நிறுத்தவும், ஆக்கிர மிப்புகளை அகற்றவும் சமூகசெயல்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பக்கிங்காம் கால்வாயில்  கட்டுமானத்தை தடுக்க கோரிக்கை

செங்கல்பட்டு, ஏப்.4-  செங்கல்பட்டு மாவட் டத்திலுள்ள தேசிய நீர்வழிச் சாலை-4 (பக்கிங்காம் கால்வாய்) பகுதியில், உள் நாட்டு நீர்வழி ஆணையத்தின் அனுமதியின்றி சட்ட விரோத கட்டுமானங்கள் நடை பெறுவதாகப் புகார் எழுந்துள்ளது. மாநில நீர்வளத் துறை செயல்படுத்தும் கோவளம் துணை வடிநில நீர்த்தேக்கத் திட்டத்திற்காக, முறையான அனுமதியின்றி கால்வா யின் குறுக்கே கான்கிரீட் கட்டு மானங்கள் மற்றும் கரைகள் அமைக்கப்படுவதாகவும், இதனால் நீரோட்டம் பாதிக் கப்பட்டு மணல் திட்டுகள் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2016-ஆம் ஆண்டு சட்டப்படி இது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்வழி என்பதால், உரிய தொழில்நுட்ப அனு மதியின்றி நடைபெறும் இப்பணி களை உடனடியாக நிறுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சமூக செயல்பாட்டாளர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை  மீறிய யூடியூபர் வாராகி மீண்டும் கைது

சென்னை,ஏப்.4- நிபந்தனை ஜாமினில் வெளிவந்த யூடியூபர் வாராகி (எ) வி.ஆர். கிருஷ்ணகுமார், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப் ்படி மார்ச் 30-ஆம் தேதிக்குள் சிறை அதிகாரிகளிடம் சரணடையத் தவறியதால் மீண்டும் கைது செய்யப் பட்டார். வீட்டின் உரிமையாளரை ஆபாசமாகப் பேசி மிரட்டி யது மற்றும் பெண் வன் கொடுமை புகார்களில் ஏற்கெனவே குண்டர் சட்டத் தில் கைதாகி இருந்த இவர், 3 மாத இடைக்கால ஜாமி னில் வெளியே இருந்தார். தற்போது சரணடையாத காரணத்தால் சிறைத் துறையினர் அளித்த புகா ரின் பேரில் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட் டார். இவர் மீது நிலுவை யில் உள்ள 15 குற்ற வழக்கு கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.