தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்தியாவில் 3 மாதங்களில் 34.4 லட்சம் யூடியூப் வீடியோக்கள் நீக்கம்!

4 hours before
இந்தியாவில் 3 மாதங்களில் 34.4 லட்சம் யூடியூப் வீடியோக்கள் நீக்கம்!

இந்தியாவில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் 34.4 லட்சம் வீடியோக்களை யூடியூப் நீக்கியுள்ளது.

யூடியூப் வெளியிட்டுள்ள சமூக வழிகாட்டுதல்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 1.1 கோடி யூடியூப் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் 34.4 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. இது, உலகளவில் நீக்கப்பட்ட வீடியோக்களில் சுமார் 31 சதவிகிதமாகும்.

உலகளவில் அதிகபட்சமாக நீக்கப்பட்ட யூடியூப் வீடியோக்கள் இந்தியாவில் இருந்து பதிவிட்டவௌ. முந்தைய ஜனவரி – மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் நீக்கப்பட்ட வீடியோக்களின் எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இந்தப் பட்டியலில் அமெரிக்கா 12.4 லட்சம் வீடியோக்களுடன் இரண்டாவது இடத்திலும், இந்தோனேசியா 9.2 லட்சம் வீடியோக்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

உலகளவில் நீக்கப்பட்ட மொத்த வீடியோக்களில் 68.2% குழந்தைகள் பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக நீக்கப்பட்டுள்ளன. 11%-க்கும் அதிகமான வீடியோக்கள் இணையவழி துன்புறுத்தல் காரணமாக நீக்கப்பட்டுள்ளன. மற்றவை, ஆபாசமான காட்சிகள், வன்முறை, தவறான தகவல்கள் மற்றும் ஸ்பேம் ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன.

மேலும், நீக்கப்பட்ட வீடியோக்களில் 98.6 சதவீதம் தானியங்கி கண்காணிப்பு அமைப்புகள் மூலம் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டவை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோக்கள் பதிவேற்றப்பட்ட நாட்டை, அவற்றைப் பதிவேற்றியவர்களின் ஐபி முகவரி அடிப்படையில் யூடியூப் தீர்மானிக்கிறது. வீடியோக்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்களை நாடுகள் வாரியாக அல்லாமல், உலகளாவிய அளவில் மட்டுமே யூடியூப் வெளியிட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.