நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வாலிபர்கள் நூதன போராட்டம்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வாலிபர்கள் நூதன போராட்டம்</strong></p>
<p>மதுரை, பிப்.17- மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக்குயில்குடி பகுதிகளில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி யும், இளைஞர்களுக்கான விளை யாட்டு மைதானம் அமைக்க வலி யுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நூதன முறையில் காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்பகுதிகளில் முன்பு விளை யாட்டு மைதானமாக பயன்படுத்தப் பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தாகவும், அதனை உடனடியாக அகற்றி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்றும், ஆக்கிர மிப்புக்கு துணைபுரியும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை வைத்தது. போராட்டத்தில் சிறுவர்கள், இளை ஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக் கள் ஏராளமாக கலந்து கொண்டனர். அவர்கள் விளையாட்டு உபகரணங் களை கொண்டு வந்து கிரிக்கெட், கபடி, பெண்களுக்கான கோ-கோ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை அங்கு விளையாடி, தங்களது கோரிக்கையை நூதனமாக வெளிப்படுத்தினர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் திருதரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வி. கருப்பசாமி, மாவட்டச் செயலாளர் தமி ழரசன், மாநில துணை செயலாளர்கள் செல்வா, அட்சயா, மாநகர் மாவட்டச் செயலாளர் வேல்தேவா, புறநகர் செயற்குழு உறுப்பினர் சந்தியா, மாவட்டக் குழு உறுப்பினர் தர்ஷினி, கிளைத் தலைவர் சரண்ராஜ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் சிபிஎம் கிளைச் செயலாளர்கள் ராஜா, முருகன், தேவேந்திரன் உள்ளிட்டோ ரும் பங்கேற்றனர். போராட்டத்திற்குப் பின்னர், கோரிக்கை தொடர்பாக மாவட்ட நேர் முக உதவியாளரிடம் மனு வழங்கப்பட் டது. மனுவை பெற்ற அதிகாரி விரை வில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.</p>
