ஆபத்தை உணராமல் கரடி அருகில் சென்று புகைப்படம் எடுத்த இளைஞர்கள் வனத்துறை கடும் எச்சரிக்கை
22 May 2026, 1:42 am
<p><strong>ஆபத்தை உணராமல் கரடி அருகில் சென்று புகைப்படம் எடுத்த இளைஞர்கள் வனத்துறை கடும் எச்சரிக்கை!</strong></p><p>உதகமண்டலம்,மே 21- நீலகிரி மாவட்டம், முதுமலை புலி கள் காப்பகத்தின் வெளிமண்டல வனப் பகுதியில் அமைந்துள்ள மசினகுடி - மாயார் சாலையில், கரடி ஒன்றின் அருகே ஆபத்தான முறையில் நின்று இருசக்கர வாகன இளைஞர்கள் புகைப்படம் எடுத்த காட்சி சமூக வலை த்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மசினகுடி - மாயார் சாலைப் பகுதி யில் புலி, சிறுத்தை, கரடி, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி சாலை ஓரங்களில் உலா வருவது வழக்கம். இதனால், இந்தச் சாலை யில் பயணிக்கும் வாகன ஓட்டி களுக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிகளையும் விதித்து அனுமதி அளித்து வருகின்ற னர். செல்பி மோகம் இந்நிலையில், புதன்கிழமை மாலை அப்பகுதி சாலை ஓரத்தில் கரடி ஒன்று நீண்ட நேரமாக உலா வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சில இளைஞர்கள், கரடியின் ஆக்ரோஷ மான சுபாவத்தை உணராமல், அதன் மிக அருகே சென்று தங்களது செல் போனில் புகைப்படம் மற்றும் வீடியோ க்களை எடுத்துள்ளனர். விலங்கு களின் அச்சுறுத்தல் இருக்கும் பகுதி யில், வாகனத்தை நிறுத்தக் கூடாது என்ற விதியை மீறி, இளைஞர்கள் கரடிக்கு மிக அருகில் நின்றுகொண்டு ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் வகையில் நடந்துகொண்ட இக்காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. வனத்துறை எச்சரிக்கை இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த வனத்துறையினர், “சாலை ஓரங்களில் உலா வரும் வனவிலங்கு களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ அல்லது அவற்றின் அருகே சென்று புகைப்படம், செல்ஃபி எடுக்க முயன்றாலோ சம்பந்தப்பட்ட வர்கள் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளனர். மேலும், இப்பகுதி யில் கண்காணிப்பைத் தீவிரப்படுத் தவும் வனத்துறை திட்டமிட்டுள்ளது.</p>
