தாராபுரம் அம்பேத்கர் பயிற்சி மையத்தில் பயின்ற இளைஞர் அரசுப் பணிக்கு தேர்வு
10 Dec 2025, 4:08 pm
<p><strong>தாராபுரம் அம்பேத்கர் பயிற்சி மையத்தில் பயின்ற இளைஞர் அரசுப் பணிக்கு தேர்வு</strong></p>
<p>திருப்பூர், டிச. 10 - தாராபுரம் அம்பேத்கர் வேலை வாய்ப்பு பயிற்சி பயின்ற இளைஞர் தமிழ் நாடு அரசு உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில் இளநிலை உதவியாளராக பணி நியமனம் பெற்றிருக்கிறார். தாராபுரம் நகருக்கு அருகில் கண் ணாங்கோயில் ஊராட்சிக்கு உட்பட்ட குள் ளாயிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 34). இவர் தாராபுரத்தில் உள்ள அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு பயிற்சி பெற்று வந்தார். அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் நடத்திய தொகுதி 4 தேர்வில் பங்கேற்று தேர்வெழுதினார். இந்த தேர்வில் அவர் வெற்றி பெற்றார். நேர்காணலுக்கு அழைக் கப்பட்ட அவர், உள்ளாட்சி தணிக்கைத் துறையில் இளநிலை உதவியாளராக (ஜே.ஏ.) பணி நியமனம் செய்யப்பட்டிருக் கிறார். சென்னையில் செவ்வாயன்று பணி நிய மன ஆணை பெற்ற நிலையில் குமரேசன் புதன்கிழமை தாராபுரம் அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்திற்கு வருகை தந்து, அதன் பொறுப்பாளர் என். கனகராஜிடம் வாழ்த்துப் பெற்றார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் படித்துப் பயிற்சி பெற்ற குமரேசனின் தம்பி ராஜேஷ் என்பவரும் இதே போல் அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தில் தொகுதி 4 தேர்வெழுதி வெற்றி பெற்று, தமிழ்நாடு அரசு கல்வித் துறையில் இளநிலை உதவியாளராக பண நியமனம் பெற்றிருந்தார். ஒரே குடும்பத் தைச் சேர்ந்த அண்ணன், தம்பி இருவரும் அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று அரசுப் பணி யில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.</p>
