தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

13 Mar 2026, 4:52 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

காலிங்கராயன் தொட்டிப்பாலத்தை இடிக்கக்கூடாது:  அமைச்சர் அறிவுறுத்தல்

ஈரோடு, மார்ச் 13- பழமையான காலிங்கராயன் தொட்டிப்பாலத்தை இடிக்காமல், புதிய பாலம் கட்ட வேண்டும் என அதிகாரி களுக்கு அமைச்சர் சு.முத்துசாமி அறிவுறுத்தியுள் ளார். ஈரோடு மாவட்டம், காரைவாய்க்கால் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்கால் மைல் 13/7 இல்  உள்ள தொட்டிப்பாலம் சீரமைப்புப் பணிகள் குறித்து,  வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வியாழ னன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பெரும் பள்ளம் ஓடையின் மேல் பாயும் பாலம் 750 ஆண்டுகள்  பழமையானது. பாராம்பரியம் கொண்ட புராதான தொட்டி நீர் வழிப்பாலம். காலிங்கராயன் பாலம் என்பது  தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு வர லாற்றுச் சிறப்புமிக்க பாலம். பவானி, நொய்யல், நதி களை இணைக்கும் தொட்டிபாலம். இப்பாலம் விவ சாயிகளின் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. தமிழ்நாட்டின் முதல் நீர் வழிப்பாலம் என்று போற்றப் படுகிறது. இப்பாலம் 8 நுாற்றாண்டுகளாக தமிழ் நாட்டில் செயல்பாட்டில் இருக்கும் ஒரே நீர்வழிப் பாலம் இதுவாகும். தற்போது, இப்பாலம் சிதில மடைந்து வருவதால், அதை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில் பெரும்பள்ளம் ஓடை யில் காலிரங்கராயன் வாய்க்கால் மைல் 13/7 தொட்டி  பாலம் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. தற்போதுள்ள பாலத்தை இடிக் காமல், பாலத்தின் அருகிலிலேயே ஒரு பாலம் அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சர்  அறிவுறுத்தினார். முன்னதாக, இந்நிகழ்வில் மாவட்ட  ஆட்சியர் ச.கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் சந்திர குமார், வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தி உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

பள்ளத்தில் சிக்கிய லாரி

கோவை, மார்ச் 13- போத்தனூரில் பழைய பாதாள சாக்கடை குழாய் உடைந்து, கழிவுநீர் வெளி யேறிய நிலையில், அவ்வழி யாக சென்ற டிப்பர் லாரி விபத்தில் சிக்கியதால் பர பரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், போத்தனூர் - குறிச்சி சாலை யில் செல்லும் பழைய பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி சாலை நெடுக  வழிந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந் தனர். மேலும், கழிவுநீரால்  மண் அரிப்பும் ஏற்பட்டது.  இந்நிலையில், வெள்ளி யன்று குறிச்சி சாலையில் இரும்பு பாரத்துடன் சென்ற டிப்பர் லாரி ஒன்று திடீரென  ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி யது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்ட நிலையில், அங்கு வந்த  போலீசார் கிரேன் மூலம் லாரியை போராடி மீட்டனர்.

கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

கோவை, மார்ச் 13- ஆரிய வைத்திய பார்மசி நிறுவனர் மகள் கொலை  வழக்கில், மேலும் ஒரு நேபாள இளைஞரை போலீ சார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கோவை, ஆரிய வைத்திய பார்மசி நிறுவனர் பி.வி. ராம வாரியரின் மகள் கஸ்தூரி ஜி.குட்டி (82). நஞ் சுண்டாபுரம் பகுதியிலுள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்த இவர், மார்ச் 6 ஆம் தேதியன்று சடல மாக மீட்கப்பட்டார். அவரது வீட்டிலிருந்த ஐந்து  சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.40 லட்சம் ரொக்கம்  கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இச்சம்ப வம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், கஸ்தூரி வீட்டில் பணி யாற்றி வந்த நேபாளம் நாட்டை சேர்ந்த சுர்ஜா ரோக்கி  மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு இதில் தொடர்பிருப் பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, மார்ச் 10 ஆம்  தேதி நேபாளத்தை சேர்ந்த ராகேஷ் சாடு (26) மற்றும்  திலீப் (26) ஆகிய இருவரை தனிப்படை போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில்,  பெங்களூருவில் பதுங்கியிருந்த டாமர் பகதூர் பத்து  என்கிற தினேஷ் (26) என்ற இளைஞரை போலீசார்  கைது செய்தனர். தொடர்ந்து, அவர் வெள்ளியன்று  நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்ட பின், கோவை  மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும், தப்பி யோடிய சுர்ஜா ரோக்கி மற்றும் அவரது நண்பரை  போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மரணமடைந்த ஆதரவற்ற முதியவர்: தெய்வ சிட்டி அறக்கட்டளை நல்லடக்கம்

திருப்பூர், மார்ச் 13 - திருப்பூர் மாநகர் தண்ணீர் பந்தல் காலனி சிக்னல் பகுதி யில் ஆதரவின்றி பரிதவித்த முதியவரை தெய்வா சிட்டி அறக் கட்டளையினர் மறுவாழ்வு இல்லத்தில் பராமரித்து வந்த னர். உடல் நலக்குறைவினால் உயிரிழந்த நிலையில் அவரை  அந்த அறக்கட்டளை அமைப்பினர் மின் மயானத்தில் தகனம்  செய்தனர்.  தண்ணீர் பந்தல் காலனி பகுதியில் ஆதரவின்றி பரிதவித்த  முதியவர் ராமமூர்த்தி (வயது 70) குறித்து திருப்பூர் 11 வது  வார்டு கவுன்சிலர் செல்வராஜ் மூலம் தெய்வா சிட்டி அறக்கட் டளை அமைப்பினர் அறிந்தனர். அவரை அவிநாசி தாலுகா  போத்தம்பாளையத்தில் உள்ள தங்களது மறுவாழ்வு இல் லத்தில் தங்க வைத்தனர்.  சுமார் மூன்று மாதங்கள் அவரை பராமரித்து வந்த நிலை யில் கடந்த சில நாட்களாக அவர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு,  திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.  சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் கடந்த புதன்கிழமை  இரவு காலமானார்.  அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், காவல்துறையினர் மூலம் முறையாக அனுமதி பெற்று நியூ  தெய்வ சிட்டி அறக்கட்டளை அமைப்பினர் அவரது உடலை  பெற்றனர். அனுப்பர்பாளையம் ஆத்துப்பாளையம் சாலை யில் உள்ள அரிமா மின் மயானத்தில் அவரது உடலை உரிய  முறையில் தகனம் செய்தனர். இந்த சேவைப் பணியில் அறக்கட்டளை நிறுவனத் தலை வர் ந.தெய்வராஜ், சிவகாமி, செல்வராஜ் மற்றும் சூர்ய கலா, இந்திராணி, செல்வி பலர் கலந்து கொண்டனர்.

பழனி – தாராபுரம் நான்கு வழிப்பாதை முதல்வர் திறந்து வைத்தார்

திருப்பூர், மார்ச் 13- தாராபுரம் வட்டம், பழனி தாராபுரம் சாலை இருவழிப்பா தையில் இருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தப் பட்டுள்ளது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெள்ளியன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து  காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட பழனி தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் சின்ன வேலம் பட்டி முதல் உப்புத்துறைப்பாளையம் வரை சுமார் 13 கிமீ  சாலை முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 87.69 கோடி மதிப்பீட்டில் இருவழித்தடத்திலிருந்து நான்கு  வழித்தடமாக அகலப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட் டிற்கு திறக்கப்பட்டுள்ளது.இச்சாலையை பயன்படுத்துவ தால் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவர்.  மேலும், போக்குவரத்து பயண நேரம் குறைவதுடன், வாகன  விபத்துகளும் தடுக்கப்படும். மேலும், சாலை அகலப்ப டுத்தும் பணிக்கு இடையூறாக ஓடுதளத்தின் அருகே இருந்த  189 மின்கம்பங்கள் மற்றும் 7 மின்மாற்றிகள் நெடுஞ்சா லைத்துறை எல்லையில் மாற்றி அமைக்கப்பட்டது.இச்சா லையில் ஏற்கனவே இருந்த 18 சிறு பாலங்கள் நான்கு வழிச்சா லைக்கு தகுந்தவாறு திரும்பக் கட்டப்பட்டுள்ளன. இதை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச்  செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து  வைத்தார்.  இந்நிகழ்வின் போது பொதுப்பணித்துறை, நெடுஞ்சா லைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

பாலி பேக், அட்டைப் பெட்டிகள் விலை உயர்வு

திருப்பூர், மார்ச் 13 - அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் மீது  தொடுத்த போரின் காரணமாக கடல்  வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வரு கின்றன.  திருப்பூரில் பின்னலாடைகளை பார்சல் செய்ய பயன்படும் பாலி பேக்,  அட்டைப்  பெட்டிகள் விலையும் கடுமை யாக உயர்ந்துள்ளது என்று திருப்பூர் தொழில் தறையினர் தெரிவித்தனர். குறிப்பாக ஏற்றுமதி பின்னலாடை சரக்குகளை பார்சல் செய்வதற்கு பயன் படுத்தப்படும் பாலி பேக்குகள், பெட் ரோலிய மூலப்பொருளில் இருந்து தயா ரிக்கப்படும் பாலித்தீன் மூலம் தயாரிக் கப்படுகிறது. தற்போது மேற்காசியாவில் நடை பெற்று வரும் போர் காரணமாக ஈரான் வளைகுடா ஒட்டி உள்ள ஹெர்மோஸ் நீர் இணை மூடப்பட்டுள்ளது. மிகப் பிர தானமான கப்பல் போக்குவரத்து பாதிக் கப்பட்டுள்ளது.  கச்சா எண்ணெய் வரத்து குறைந்த  நிலையில் அதன் உற்பத்தி பொருள்கள்  தயாரிப்பதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாலித்தீன் சார்பு  பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.  குறிப்பாக திருப்பூரில் கடந்த பத் தாண்டு காலமாக பருத்தி  நூல் மூலம்  தயாரிக்கும் ஆடைகள் உற்பத்தியுடன், பாலிஸ்டர் மூலம் ஆடை தயாரிப்பும் அதிகரித்துள்ளது. பாலிஸ்டர் நூல்  விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.  ஒரு கிலோவுக்கு 30 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது என்று இங்குள்ள தொழில்துறையினர் தெரிவித்தனர்.  பாலிஸ்டர் நூல் மட்டுமின்றி பாலி பேக்குகள் விலையும் கடுமையாக அதி கரித்துள்ளது. அதுமட்டுமின்றி பாலி  பேக்குகள் கிடைப்பதும் அரிதாகி உள் ளது. பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என் றும் திருப்பூர் தொழில் முனைவோர் கூறி னர்.  அட்டைப் பெட்டிகள் விலை உயர்வு  தயாரிக்கப்பட்ட முழுமையடைந்த  சரக்குகளை அனுப்புவதற்கு பயன்ப டுத்தப்படும் அட்டைப்பெட்டிகள் விலை யும் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து  பேக்கிங் நிறுவனம் நடத்தி வரும் சுரேஷ் மணி கூறுகையில், உயர்தரமான அட் டைப் பெட்டிகள் தயாரிப்பதற்கு உள் நாட்டு பழைய காகிதங்கள் மட்டுமின்றி  வெளிநாடுகளில்  இருந்தும் பழைய காகிதங்கள் அட்டைகள் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டு, அவற்றை மூலப்பொருளாகக் கொண்டு தரமான அட்டைப்பெட்டிகள் தயாரிக்கப்படும். எனினும் வரத்து குறைந்து பற்றாக்கு றையாக இருப்பதால் விலை உயர்ந் துள்ளது. இப்போர் துவங்குவதற்கு முன் பாகவே டன்னுக்கு ரூ. 2000 அதிகரித்தது.   மேற்கு ஆசியாவில் போர் தொடங்கிய  பிறகு கடந்த வாரம் மட்டும் ஒரு டன் னுக்கு ரூ. ஆயிரம் அதிகரித்துள்ளது. வரக்கூடிய வாரத்திலும் இன்னும் விலை உயரும் என்று கூறப்படுகிறது, என்று தெரிவித்தார்.  உற்பத்தி செலவு அதிகரித்தாலும், விலையைக் கூட்டினால் வாடிக்கையா ளர்களிடம் பெற முடியாத நிலை தான்  இருக்கிறது என்றும் தொழில்துறையி னர் தெரிவித்தனர்.  மற்றொருபுறம் பெட்ரோலிய மூலப்   பொருள்கள் உற்பத்தியில் ஏகபோக மாக இருக்கும் பெரும் கார்ப்பரேட் நிறு வனங்கள், உண்மையான பற்றாக் குறை ஏற்படாத நிலையிலும், போர் நடைபெறுகிறது என்ற காரணத்தைச் சொல்லி, செயற்கையாக விலையை கூட்டி வருகின்றனர், என்றும் தொழில்துறையினர் வேதனையுடன் கூறினர்.

பட்டமளிப்பு விழாவிற்கு அதிக கட்டணம் ஆட்சியரிடம் மாணவர் சங்கம் புகார்

சேலம், மார்ச் 13- அரசு இருபாலர் கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா விற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக்கூறி, இந்திய  மாணவர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் புகாரளித்தனர். இதுகுறித்து அம்மனுவில், சேலம் அரசு இருபாலர் கலைக் கல்லூரியில் சுமார் 5000 மாணவர்கள் படித்து வருகின்ற னர். இந்நிலையில், 2022 - 2025 கல்வியாண்டில் முடித்த இளங் கலை மாணவர்கள் மற்றும் 2023 - 2025 முதுகலை முடித்த மாண வர்களுக்கு மார்ச் 17 ஆம் தேதியன்று பட்டமளிப்பு விழா நடத்து வதாக கல்லூரி நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது. இந்த விழா வில் பங்கேற்கும் மாணவர்களிடம் ரூ.600 வசூலிக்கின்றனர்.  இதுசம்பந்தமாக கல்லூரி முதல்வரிடம் கேட்டதற்கு, கல்லூரி  நிர்வாகத்திடம் பணம் இல்லை என்று பல்வேறு காரணங் களைக்கூறி, மாணவர்களிடமிருந்து பணத்தை சுரண்டுகின்ற னர். பழைய கட்டணமான ரூ.300 வசூலிக்க வேண்டும் என்பதே  அனைத்து மாணவர்களின் கோரிக்கையாகும். எனவே,  ஆட்சியர் உடனடியாக தலையிட்டு சரியான கட்டணத்தை  வாங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்வில் மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டார்வின் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

தருமபுரி, மார்ச் 13- தருமபுரி மாவட்டம், மதிகோண்பாளையம் காவல் நிலை யத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சூரத் (24). இவர் கடந்த  2021 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு  பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுதொடர் பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மதி கோண்பாளையம் காவல் துறையினர், போக்சோ சட்டத் தின் கீழ் வழக்குப்பதிந்து சூரத்தை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை தருமபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந் நிலையில், இவ்வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டதை யடுத்து, சூரத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10  ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அசின்பானு உத்தரவிட் டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.