திருப்புவனத்தில் மின்பகிர்மான அலுவலக முறைகேடுகளை கண்டித்து வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்
9 Mar 2026, 4:24 pm
<p><strong>திருப்புவனத்தில் மின்பகிர்மான அலுவலக முறைகேடுகளை கண்டித்து வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்'</strong></p>
<p>சிவகங்கை, மார்ச் 9- சிவகங்கை மாவட்டம் திருப்பு வனத்தில் உள்ள மின்பகிர்மான அலுவலகத்தில் நடைபெறுகின்ற தாக கூறப்படும் முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்புவனத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் முத்துராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பேசியவர் கள், கடந்த காலங்களில் மின் இணைப்பிற்காக அளிக்கப்பட்ட ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என வலி யுறுத்தினர். மேலும் போலி சொத்து வரி ஆவணங்கள் தயாரித்து லஞ் சம் பெற்றதாக கூறப்படும் உதவி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இத னால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள தாகவும் தெரிவித்தனர். அதேபோல் திருப்புவனம் 16-வது வார்டில் நிலவும் மின் பற் றாக்குறையை போக்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண் டும் என்றும் கோரிக்கை விடுக்கப் பட்டது. இந்த போராட்டத்தில் மாவட்டத் தலைவர் சத்தியசீலன், மாவட்டச் செயலாளர் சேவகப்பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர் தமி ழரசன், மாவட்ட துணைச் செய லாளர் வெங்கடேசன், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் பவித்ரா, மாவட்டச் செயலாளர் ரோகிணி உள்ளிட்டோர் விளக்கிப் பேசினர்.</p>
