முந்தய பக்கம்

தேவாங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு அய்யலூரில் இளைஞர்கள் மாரத்தான்

16 Nov 2025, 3:30 pm
தேவாங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு  அய்யலூரில் இளைஞர்கள் மாரத்தான்
<p><strong>தேவாங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு &nbsp;அய்யலூரில் இளைஞர்கள் மாரத்தான்</strong></p> <p>ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., துவக்கி வைத்தார் திண்டுக்கல், நவ.16- திண்டுக்கல் மாவட்டம் அய்ய லூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக அழிந்து வரும் அரிய வகை உயிரினம் தேவாங்கு களை பாதுகாக்கும் பொருட்டு அய்யலூரை தேவாங்கு சரணாலய மாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத னையடுத்து தேவாங்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகை யில் அய்யலூர் அருகேயுள்ள வளவிசெட்டிபட்டியில் ஞாயிறன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வடமதுரை ஒன்றியக்குழு சார்பாக நடைபெற்ற மாரத்தான் போட்டி யை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., துவக்கி வைத்தார். முன்னதாக தேவாங்கு பாது காப்பு உறுதியேற்பு நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ, மாணவியர்கள் ஆர்வத்து டன் பங்கேற்றனர். வாலிபர் சங்கத் தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் ரஞ்சித், மாவட்டச் செயலாளர் முகேஷ், வடமதுரை ஒன்றிய தலை வர் சங்கம் ஒன்றிய செயலாளர் ரஞ்சித், திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் பொருளாளர் துரைராஜ், சார்பு ஆய்வாளர் வேலு மணி, வனத்துறை ரேஞ்சர் முரு கேசன், வடமதுரை பேரூராட்சி துணைத் தலைவர் மலைச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். &nbsp;போட்டியில் வெற்றி &nbsp;பெற்றவர்க ளுக்கு &nbsp;ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. பரிசுகள் வழங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram