முந்தய பக்கம்

தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

31 May 2026, 8:31 pm
தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

நாமக்கல்/சேலம், மே 31- திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வ ரர் கோவில் திருவிழாவில், தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த நிலையில், முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்து, குடும்பத்திற்கு நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருவிழா ஞாயிறன்று நடை பெற்றது.

இதில் தேரோட்டத்தின்போது, தேர் திரும்புகையில், சக்கரத்திற்கும் சுவற்றிற்கும் இடையில் சிக்கி கோவிந்தராஜா என்பவரின் மகன் ஹர்ஷவர்தன் (18) மற்றும் கௌரிசங்கர் என்பவரின் மகன் சஷ்டிகன் (19) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

சேலம் அரசு மோகன் குமாரமங்க லம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஹர்ஷவர்தன் உயிரிழந்தார். மேலும், சஷ்டிகனுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

முதல்வர் இரங்கல் உயிரிழந்த இளைஞரின் உடலுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் தமிழன் விஜய்பார்த்திபன், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், சிகிச்சையில் உள்ள சஷ்டிகனை நேரில் சந்தித்து நலம் விசா ரித்தனர்.

இதனிடையே, உயிரிழந்த ஹர்ஷவர்தனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஜோசப் விஜய், அவரது குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram