காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் உயிரிழப்பு தூத்துக்குடி போலீசார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு; உடலை வாங்க மறுத்து போராட்டம்
23 Jul 2026, 10:50 pm
<p><strong>காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் உயிரிழப்பு தூத்துக்குடி போலீசார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு; உடலை வாங்க மறுத்து போராட்டம்</strong></p><p>தூத்துக்குடி, ஜூலை 23: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோத மாக மதுபானம் விற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத் துச் செல்லப்பட்ட அருணாச்சலம் (24) அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையின் தாக்குதலே இந்த மரணத்திற்குக் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டி உடலை வாங்க மறுத்துத் தொடர் போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைதும் காவல்துறையின் விளக்கமும் தூத்துக்குடி அமுதா நகர் 1-ஆவது தெருவைச் சேர்ந்த நாகராஜின் மகன் அரு ணாச்சலம், கடந்த ஜூலை 17 அன்று எப்.சி.இ. குடோன் அருகே 120 மதுபான பாட்டில்களைச் சட்டவிரோதமாக வைத்திருந் ததாகக் கூறித் தாளமுத்துநகர் தலைமைக் காவலர் மீனாட்சி சுந்தரத்தால் பிடிக்கப்பட்டார். பின்னர் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தரண்யா வழக்குப் பதிவு செய்து கைது செய்தார். கைதுக்குப் பின் சட்டப்படி அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப் பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரி சோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தாகவும், அப்போது அவரது உடலில் வெளிப் புற காயங்கள் எதுவும் இல்லை என மருத்து வர்கள் சான்றளித்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காவல் நிலைய லாக்-அப்பில் வைக்கப்பட்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்ததாகவும், முதலுதவிக்குப் பின் உற வினர்களின் கோரிக்கையை ஏற்றுத் தொடர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பல னின்றி ஜூலை 23 அன்று உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். உறவினர்கள் மற்றும் தாயாரின் குற்றச்சாட்டு ஆனால், காவல்துறையினரின் இந்தப் பதிவை உறவினர்கள் முற்றிலுமாக மறுத் துள்ளனர். உயிரிழப்பதற்கு முன்பு அருணாச் சலம், போலீசார் தன்னைத் தாக்கியதாகவும், ஒரு கடை முன்பு வைத்துத் தலையில் அடித்ததாகவும் கூறிய வாக்குமூல வீடியோ வெளியாகியுள்ளது. காவல் துறையினரின் கொடூரத் தாக்குதலால்தான் தன் மகன் உயிரிழந்ததாக அவரது தாயார் பரமேஸ்வரி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தரண்யா மற்றும் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரி டம் புகார் அளித்துள்ளார். அரசியல் கட்சிகள் ஆதரவு மற்றும் சாலை மறியல் உறவினர்கள் அரசு மருத்துவமனை வளா கத்தில் உடலை வாங்க மறுத்துப் போராட் டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, பிரேதப் பரி சோதனைக்காக மருத்துவமனையின் பின்பக்க வாசல் வழியாக உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது மருத்துவமனை வளா கத்தில் கடும் பதற்றம் ஏற்பட்டது. பொது மக்களும் உறவினர்களும் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போ ராட்டத்திற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறு முகம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேரில் சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். சிபிஎம் மாவட்டக் குழு வலியுறுத்தல் காவல் பாதுகாப்பில் இருந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து வெளிப்படை யான, நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறு முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலி யுறுத்தியுள்ளார். மேலும் அவர் விடுத் துள்ள முக்கியக் கோரிக்கைகள்: அருணாச்சலத்தின் மரணம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது நீதித்துறை நடுவர் தலைமையில் நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணை நிறைவடையும் வரை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளைப் பணி யிடை நீக்கம் செய்ய வேண்டும். தாளமுத்துநகர் காவலர் மீனாட்சி சுந்தரம் தென்பாகம் காவல் நிலைய எல்லைக் குள் சென்று கைது செய்த செயல் சட்டப் பூர்வமானதா என்பது குறித்து விரிவான விசா ரணை நடத்த வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட உதவி ஆய் வாளர் தரண்யா மற்றும் காவலர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த அருணாச்சலத்தின் குடும் பத்திற்குத் தமிழக அரசு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.</p><p> </p>
