பாலத்தின் மீது பைக் மோதி வாலிபர் பலி
10 Nov 2025, 5:08 pm
<p><strong>பாலத்தின் மீது பைக் மோதி வாலிபர் பலி </strong></p>
<p>சென்னை, நவ. 10- சென்னை கிண்டியில் பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் உயிரிழந்தார். மேற்கு மாம்பலம் கன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் யோகேஷ் (22). இவர் உணவு டெலிவரி நிறு வன ஊழியராக வேலை செய்து வந்தார். யோ கேஷின் நண்பர் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த ஏ.பிரதீஷ் (20). இவர் பி.இ. மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கிண்டியில் உள்ள தங்களது நண்பரை சந்தித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளி ரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை யோ கேஷ் ஓட்டினார். இருவரும் கிண்டி ஆடுதொட்டி பாலத்தின் மீது செல்லும் போது திடீரென கட்டுப் பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், அங்கிருந்த பாலத்தின் சுவர் மீது மோதி யது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து யோகேஷ், பிரதீஷ் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர். பலத்தக் காயமடைந்த யோகேஷ் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். பிரதீஷை அங்கு வந்த பொதுமக்கள் மீட்டு, கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வரு கின்றனர்.</p>
