தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விசாரணையின்போது இளைஞர் உயிரிழப்பு காவல்துறையினரை கைது செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

25 May 2026, 10:43 pm
விசாரணையின்போது இளைஞர் உயிரிழப்பு காவல்துறையினரை கைது செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

விசாரணையின்போது இளைஞர் உயிரிழப்பு காவல்துறையினரை கைது செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

சிவகங்கை, மே 25- மானாமதுரையில் போலீஸ் விசார ணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, உயிரி ழந்த ஆகாஷ் டெலிசனின் பெற்றோர் மற் றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை யைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (26) என்ப வர், காவல்துறையினரால் விசாரணைக் காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரி ழந்தார்.

அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த மார்ச் 8 அன்று உயிரிழந்தார்.

ஆகாஷின் உடற்கூறாய்வில் அவரது உடலில் 28 இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்ததையடுத்து, திருப்புவனம் காவல் ஆய்வாளர் திலீபன் உள்ளிட்ட 6 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன் தொடர்ந்த மனுவின் பேரில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த மரணத்தை கொலை வழக்காக மாற்றவும், சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டது.

மேலும், விசாரணையை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது சிபி சிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆகாஷ் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்யக் கோரி குடும்பத்தினரும், பல்வேறு அரசியல் கட்சியினரும் உடலை பெற்றுக் கொள்ள மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசின் சார்பில் ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிவகங்கையில் நடை பெற்ற மக்கள் குறைதீர் முகாமில் ஆகாஷ் டெலிசனின் பெற்றோர் ராஜேஷ்கண்ணன், ஆனந்தி மற்றும் போராட்ட ஒருங்கி ணைப்பாளர் லெனின் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடியிடம் மனு அளித்தனர்.

79 நாட்கள் கடந்தும் விசாரணை நிறைவடையவில்லை அப்போது அவர்கள் கூறுகையில், “சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 60 நாட்க ளுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

ஆனால் 79 நாட்கள் கடந்தும் விசா ரணை நிறைவடையவில்லை. குற்றப்பத்தி ரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.

முக்கிய குற்றவாளிகளாக அடையாளம் காட்டப்பட்ட காவல்துறையினரின் பெயர் கள் கூட வழக்கில் சேர்க்கப்படவில்லை.

யாரும் கைது செய்யப்படவில்லை” என்று குற்றம்சாட்டினர். மேலும், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட காவல்துறையினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.