கே.ஜி.கண்டிகையில் அரசு மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்திடுக வாலிபர் சங்கம் வலியுறுத்தல்
17 Nov 2025, 4:40 pm
<p><strong>கே.ஜி.கண்டிகையில் அரசு மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்திடுக வாலிபர் சங்கம் வலியுறுத்தல் </strong>திருவள்ளூர், நவ.17- கே.ஜி.கண்டிகையில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருத்தணி வட்ட பேரவை வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருத்தணி வட்ட பேரவை ஞாயிறன்று (நவ 16), கலையரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.மதன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சஞ்சய் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிர்வாகிகள் தேர்வு வாலிபர் சங்கத்தின் திருத்தணி வட்டார அளவில் 7பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் ஒருங்கிணைப்பாளராக கலையரசன் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், போதிய கழிப்பறை போன்ற தேவைகளை நிறைவேற்ற வேண்டும், தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>
