கூட்டுறவு வங்கி, உள்ளாட்சிப் பணி நியமன முறைகேடுகள் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்த வாலிபர் சங்கம் வலியுறுத்தல்!
12 Nov 2025, 3:20 pm
<p><strong>கூட்டுறவு வங்கி, உள்ளாட்சிப் பணி நியமன முறைகேடுகள் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்த வாலிபர் சங்கம் வலியுறுத்தல்!</strong></p>
<p>சென்னை, நவ.12- கூட்டுறவு வங்கித் துறை மற்றும் உள்ளாட்சித் துறைப் பணி நியமனங்களில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பெரும் முறைகேடுகள் குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அனைத்து நியமனத் தேர்வுகளையும் தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாகவே நடத்த வேண்டும் எனவும் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. கூட்டுறவு வங்கி வினாத்தாள் முறைகேடு மாநில ஆட்சேர்ப்புப் பணியகம் (SRB) மூலம் கடந்த 05.10.2025 அன்று நடைபெற்ற கூட்டுறவு வங்கித் துறையின் 2513 காலிப் பணியிடங்களுக் கான தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்து உள்ளதாக வாலிபர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. * கூட்டுறவு வங்கியில் பணியாற்றும் அதிகாரி கள் சிலர், தேர்வு வினாத்தாளைப் பிரிண்ட் அவுட் எடுத்து தமிழகம் முழுவதும் ரூ.8 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். * வினாத்தாள் தயார் செய்த இணைப் பதிவாளர் குழு, 1000 வினாக்கள் கொண்ட தொகுப்பை வெளி யிட்டு, அதில் இருந்து 200 வினாக்கள் தேர்வில் இடம் பெற்றது சந்தேகத்துக்குரியது என்றும், இக்குழு தொகுப்பைப் பணத்திற்காகத் தேர்வு பயிற்சி மையங்களுக்கு விற்றுள்ளதாகவும் வாலிபர் சங்கம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. * பதிவாளர் கையெழுத்து இல்லாமல் கூடுதல் பதிவாளர் கையொப்பமிட்டுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பது, இந்த நியமனங்களின் நேர்மை மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி யுள்ளது. உள்ளாட்சிப் பணிகளில் லஞ்சம் மேலும், கிராம ஊராட்சிச் செயலாளருக்கான காலிப் பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் பணியிடங்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு விற்கப்படு வதாக வாலிபர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. அதி காரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து இந்தப் பணியிடங்களை மோசடியாக நிரப்புவதாக வும், நேர்முகத் தேர்வு என்பது கண் துடைப்பே என்றும் வாலிபர் சங்க அறிக்கை தெரிவித்துள்ளது. கிராம உதவியாளர், ஊராட்சிச் செயலர் போன்ற உதவியாளர் பணிகளுக்கான நியமனங் களும் பணம் பெற்றுக் கொண்டு மறைமுகமாக நடத்தப்படுகிறது. இதனால், பணம் இல்லாத - படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கோரிக்கைகள் * கூட்டுறவு வங்கித் தேர்வை ரத்து செய்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக மீண்டும் முறையாகத் தேர்வு நடத்தப் பட வேண்டும். *கிராம ஊராட்சிச் செயலாளர் பணியிடங் கள் உட்பட, அனைத்து அரசுப் பணியிட நியமனங் களும் தேர்வாணையம் மூலமாகவே எழுத்துத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். * முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, வழக்குப் பதிந்து, மோசடியில் ஈடுபட்ட அதி காரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறைகேடு செய்திகள், அரசு வேலைக் கான இளைஞர்களின் நம்பிக்கையை சீர்குலைப் பதாக உள்ளது என வாலிபர் சங்க மாநிலத் தலை வர் செல்வராஜ், மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.</p>
