காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி வாலிபர் சங்கம் தர்ணா
20 Dec 2025, 3:38 pm
<p>அரசுத் துறைகளில் உள்ள 6 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் விழுப்புரம் நகராட்சித் திடல் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.ராமமூர்த்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.</p>
