அருங்குணத்தில் வாலிபர் சங்க விளையாட்டு போட்டிகள்
27 Jan 2026, 3:28 pm
<p><strong>அருங்குணத்தில் வாலிபர் சங்க விளையாட்டு போட்டிகள்</strong></p>
<p>வந்தவாசி வட்டம் அருங்குணம் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர்கள் முரளிகிருஷ்ணா, ஜமுனா, ஹசரபி ஆகியோர் தலைமை வகித்தனர். வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் திலகராஜ் கொடியேற்றி வைத்தார். விவசாய சங்க வட்டார செயலாளர் அண்ணாமலை சிறப்புரை ஆற்றினார். நிர்வாகிகள் செங்கேணி, மணிகண்டன், சுந்தர்ராஜ், தங்கமணி, ராஜ்குமார், ராமச்சந்திரன், ஆறுமுகம், கௌரி, அருணா, குமரேசன், ஜானகிராமன் ஆகியோர் பங்கேற்றனர்.</p>
