வாலிபர் சங்க சிறப்பு கருத்தரங்கம்
25 Feb 2026, 3:22 pm
<p><strong>வாலிபர் சங்க சிறப்பு கருத்தரங்கம்</strong></p>
<p>இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் சிறப்பு கருத்தரங்கம் மாவட்டத் துணைத் தலைவர் ஜெ.த. வசந்த் பௌத்தா தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைச் செயலாளர் எஸ். சிவனேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஜெ. தீபலட்சுமி, பத்திரிகையாளர் சேகுவேரா, வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி. அரவிந்தசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாவட்டச் செயலாளர் வி. விநாயகமூர்த்தி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இணையர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் “ஆதலால் காதல் செய்வீர்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாகக் கவிஞர் ச. சுரேஷ் கவிதை வாசித்தார்.</p>
