மதுரை மாநகரில் வாலிபர் சங்க சமத்துவ பொங்கல் விழா
17 Jan 2026, 2:42 pm
<p><strong>மதுரை மாநகரில் வாலிபர் சங்க சமத்துவ பொங்கல் விழா</strong></p>
<p>மதுரை, ஜன.17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக்குழு மற்றும் கலை –பண்பாட்டுக் கழகம் சார்பில் மேலப்பொன்னகரம் பகுதிக்குழு சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் சேகுவேரா கிளை மற்றும் மஹபூப்பாளையம் சிலம்பம் பள்ளி சார்பில் வெள்ளி யன்று மஹபூப்பாளையம் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்க கிளை தலைவர் வி.திருமுருகன் தலைமை வகித்தார். கிளை பொருளாளர் எஸ்.ஹரி கிருஷ்ணன், துணைச் செயலாளர் ஏ.மது, கிளை நிர்வாகி பி.பி.அக்சயா ஆகியோர் முன்னிலை வகித்த னர். விளையாட்டு பிரிவு நிர்வாகி பி.கார்த்திகா வர வேற்றார். மதுரை மாநகராட்சி பொறுப்பு மேயர் தி.நாக ராஜன், ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் எஸ். கே. பொன்னுத்தாய், 56 ஆவது வார்டு மாமன்ற உறுப்பி னர் வை.ஜென்னியம்மாள் ஆகியோர் உரையாற்றினர். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் செல்வா , மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.மலர்விழி, எம்.முனியாண்டி, ஜே.சிந்துமோகன், பகுதிக்குழு தலைவர், செயலாளர், பொருளாளர், மஹபூப்பாளையம் சிலம்பம் பள்ளி ஒருங்கிணைப்பாளர் பி.ரெகுராமன் மற்றும் பகு திக்குழு உறுப்பினர்கள் ஆசாத், தமிழ்வாணன், வீர மணி, ஆகாஷ், கிளை நிர்வாகிகள் உள்பட பலர் பங் கேற்றனர். விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற குழந் தைகளுக்கும் பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.</p>
