எஸ்ஐஆர் பணிக்கு ஒரு நாள் பொது விடுமுறை அளிக்க வேண்டும் தமிழக அரசுக்கு வாலிபர் சங்கம் கோரிக்கை
19 Nov 2025, 3:33 pm
<p><strong>எஸ்ஐஆர் பணிக்கு ஒரு நாள் பொது விடுமுறை அளிக்க வேண்டும் தமிழக அரசுக்கு வாலிபர் சங்கம் கோரிக்கை</strong></p>
<p>சென்னை, நவ. 19- தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணிகளுக்காக, மாநிலம் முழுவதும் ஒரு நாள் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று வாலிபர் சங்கம், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 6.41 கோடி வாக்காளர்களில் நவம்பர் 17 வரை 94.31% விண்ணப்பங்கள் விநியோகிக்கப் பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் கூறு கிறது. இருப்பினும், இந்தப் பணிகளை அவசர கதியில் நடத்துவது திட்டமிட்ட மோசடி என்றும், சிறுபான்மை மற்றும் எதிர்க்கட்சி களின் வாக்குகளை நீக்குவதற்கான சதி என்றும் வாலிபர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சங்கத்தின் மாநிலத்தலைவர் செல்வ ராஜ், மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணி என்பது இளைஞர்கள் மட்டுமல்லாமல், 60 வயதிற்கு மேற்பட்டோரின் வாக்குகளை நீக்கும் திட்டமிட்ட சதியாக உள்ளது. 50 வயதிற்கு மேற்பட்ட பெரும்பாலான மக்களிடம் தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்கள் இருக்காது என்பதால், தமிழ்நாடு அரசு பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களைப் போர்க்கால அடிப்படையில் வழங்க முடியுமா என ஆராய ஒரு சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. போதிய பயிற்சி இல்லாததாலும், கடும் பணி நெருக்கடிகளை எதிர்த்தும் வருவாய்த் துறை அலுவலர்கள் இந்தப் பணிகளை முழுமையாகப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்தச் சூழலில், கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து ஆவணங்களுடன் சமர்ப்பிப்பதற்கு, அரசு ஒரு நாள் பொது விடுமுறை வழங்க வேண்டும் என்று வாலிபர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், சென்னை, கோவை, திருப்பூர் போன்ற வெளியூர் களில் பணியாற்றும் புலம்பெயர்ந்த இளைஞர்கள் சொந்த ஊர் சென்று படிவங்களைப் பூர்த்தி செய்ய வசதியாக, விழாக்கால விடுமுறை போலக் கூடுதல் அரசுப் பேருந்துகளை குறைந்த கட்டணத்தில் இயக்க வேண்டும் என்றும் வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.</p>
