தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கிள்ளை பேரூராட்சியில் சேறும் சகதியுமான சாலை புதிய சாலை அமைக்க வாலிபர் சங்கம் கோரிக்கை

5 Dec 2025, 4:21 pm
கிள்ளை பேரூராட்சியில் சேறும் சகதியுமான சாலை புதிய சாலை அமைக்க வாலிபர் சங்கம் கோரிக்கை
<p><strong>கிள்ளை பேரூராட்சியில் சேறும் சகதியுமான சாலை புதிய சாலை அமைக்க வாலிபர் சங்கம் கோரிக்கை</strong></p> <p>சிதம்பரம், டிச. 5- சிதம்பரம் அருகே கிள்ளை பேரூ ராட்சியில் சேறும் சகதியுமாக உள்ள சாலையை புதியதாகத் தார் அல்லது கான்கிரீட் சாலை அமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பொதுமக்கள் கிள்ளை பேரூராட்சி அலுவலரிடம் மனு அளித்துள்ளனர். கிள்ளை பேரூராட்சி அலுவலகத்தில் வாலிபர் சங்கத்தின் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய அமைப்பாளர் பாலமுரளி தலைமையில் வாலிபர் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் கிள்ளை சதீஷ், விஷ்ணு பாபு, பார்த்திபன், தமிழ்மணி உள்ளிட்ட கிராம மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில், பரங்கிப்பேட்டை ஒன்றியம் கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட பிலிவர் சர்ச் நகரில் கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரு கின்றனர் என்றும், ஆனால் இதுவரை யில் இந்த நகரில் சாலை வசதி ஏற்படுத்தித் தரப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள னர். மேலும், மழைக்காலங்களில் குடி யிருப்புகளில் மழைநீர் புகுந்து ஆங்காங்கே சேறும் சகதியுமாகத் தேங்கி நிற்பதால், நோய்வாய்ப்படும் அபாயம் இருந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, உடனடியாகப் புதிய சாலை வசதி அமைத்து தர வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய சாலை அமைக்காவிட்டால், பொதுமக்களை ஒருங்கிணைத்துப் பேரூராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.