முந்தய பக்கம்

கூடுதல் பேருந்துகள் இயக்க வாலிபர் சங்கம் கோரிக்கை

21 Dec 2025, 3:21 pm
கூடுதல் பேருந்துகள் இயக்க  வாலிபர் சங்கம் கோரிக்கை
<p><strong>கூடுதல் பேருந்துகள் இயக்க &nbsp;வாலிபர் சங்கம் கோரிக்கை</strong></p> <p>நாகப்பட்டினம், டிச.21- &nbsp;நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு வாரியம் அருகில், ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அமைப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பினுடைய கொடியினை மாவட்டத் தலைவர் எம்.ஜோதி பாஸ் ஏற்றி வைத்தார். பிறகு கிளைமாநாடு நடைபெற்றது. &nbsp;ஒன்றிய செயலாளர் பாலசுந்தரம், ஒன்றிய பொருளாளர் திலீபன். ஒன்றிய துணைச் செயலாளர் லாடமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளையின் தலைவராக செந்தில், செயலாளராக அறிவழகன், துணைத் தலைவராக விக்னேஷ், துணை செயலாளராக ராஜசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வாய்மேடு மேற்கு கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும். &nbsp;பள்ளி, கல்லூரி நேரங்களில் முத்துப்பேட்டை, துளசியாப்பட்டினம், வெள்ளிக்கிடங்கு வழி, தாணிகோட்டகம் வழி, செங்காதலை பாலம் கரியாப்பட்டினம் வரை பேருந்துகள் இயக்க வேண்டும். பட்டுக்கோட்டை, வேதாரண்யம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்து இயக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram