பக்தர்களுக்கு வாலிபர் சங்கம் சார்பில் குடிநீர், மோர் வழங்கல்
1 Feb 2026, 3:51 pm
<p><strong>பக்தர்களுக்கு வாலிபர் சங்கம் சார்பில் குடிநீர், மோர் வழங்கல்</strong></p>
<p>கோவை, பிப்.1- தென்சேரிமலை தேரோட்டம் மற்றும் மருதமலை முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்களுக்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் குடிநீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை ஒன்றியம், தென்சேரிமலையில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட தங்கத்தேரின் வெள்ளோட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இத்திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிலையில், வெயிலின் தாக்கம் மற்றும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பக்தர்களின் தாகம் தீர்க்கும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சூலூர் தாலுகாக்குழு சார்பில், கிரிவலப் பாதையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில், பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் குளிர்ச்சியான மோர் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு வாலிபர் சங்கத்தின் சூலூர் தாலுகா செயலாளர் எஸ்.குரு சாரதி தலைமை வகித்தார். தாலுகா தலைவர் ஏ.பிரவீன் குமார், துணைத்தலைவர் ரவிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தாலுகாக்குழு உறுப்பினர்கள் சதீஷ், சந்திரலேகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வாலிபர் சங்கத்தின் இந்த மக்கள் நலப்பணியை பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர். இதேபோன்று வாலிபர் சங்கத்தின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு, அப்பநாயக்கன்பாளையம் கிளை சார்பில் மருதமலை முருகன் கோவிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் 1000 பேருக்கு தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. இந்நிகழ்வினை மாவட்டத் தலைவர் ந.ராஜா துவக்கி வைத்தார். இதில் ஒன்றியச் செயலாளர் பிரகதீஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர் தேவ்தத், கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
