தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம் அன்னதானம் வழங்கிய வாலிபர் சங்கம்

31 Dec 2025, 3:37 pm
அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம் அன்னதானம் வழங்கிய வாலிபர் சங்கம்
<p><strong>அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம் அன்னதானம் வழங்கிய வாலிபர் சங்கம்</strong></p> <p>கோவை, டிச.31- அன்னூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, மத நல்லிணக் கத்தை போற்றும் வகையில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் செவ்வா யன்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை, அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த &nbsp;ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் பல்லா யிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை &nbsp;வடம் பிடித்து இழுத்தனர். இந்நிலையில், மக்களிடையே ஒற்றுமையையும், மத நல்லி ணக்கத்தையும் வளர்க்கும் நோக்கில், இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அன்னூர் ஒன்றியக்குழு சார்பில் அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ் விற்கு வாலிபர் சங்கத்தின் ஒன்றியக்குழு &nbsp;உறுப்பினர்கள் அல்லாஹ் பாக்ஸ், இப்ரா ஹிம், ரஷமத்துல்லா ஆகியோர் தலைமை &nbsp;வகித்தனர். ஒரு இந்து ஆலயத் திருவிழாவில் &nbsp;இஸ்லாமிய இளைஞர்கள் முன்னின்று அன் னதானப் பணிகளை மேற்கொண்டது அப்ப குதி மக்களிடையே நெகிழ்ச்சியையும், பாராட் டுகளையும் பெற்றது. அன்னதான நிகழ்வை வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் அர்ஜுன் மற்றும் முன்னாள் ஒன்றியக் குழு &nbsp;உறுப்பினர் சுகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தேரோட்டத்தைக் காண வந்த ஆயிரக் கணக்கானோருக்கு தடையின்றி உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. வாலிபர் சங்கத்தின் தன்னார்வலர்கள் வரிசையில் நின்ற மக்க ளுக்குச் சளைக்காமல் உணவுப் பரிமாறினர். சாதி, மத பேதங்களைக் கடந்து உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் இந்த நிகழ்வு அமைந்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் வாலிபர் சங்கத்தின் ஒன்றிய, கிளை நிர்வாகி கள் மற்றும் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.