உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையின் சீர்கேடுகளை களைய வேண்டும் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
20 Nov 2025, 3:46 pm
<p><strong>உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையின் சீர்கேடுகளை களைய வேண்டும் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, நவ.20 - உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் நிலவும் அவல நிலையைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவமனை கட்டிடப் பணிகளை விரைந்து முடிப்பதுடன், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் டயாலிசிஸ் பிரிவு அமைத்து நவீன வசதிகளுடன் தரம் உயர்த்த வேண்டும், உளுந்தூர்பேட்டையில் விபத்து அதிதீவிர சிகிச்சை மையம் அமைக்க வேண்டும், அவசர சிகிச்சைக்கு வரும் மக்களை முண்டியம்பாக்கம், கள்ளக்குறிச்சி என அலைக்கழிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும், உளுந்தூர்பேட்டை நகரின் மையப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வ்லியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருநாவலூர், களமருதூர், சேந்தநாடு, செங்குறிச்சி, எலவனாசூர்கோட்டை, கிளியூர், எறையூர், காட்டு எடையார், ஆசனூர் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் மருத்துவர் மற்றும் செவிலியரைத் தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டும் என்றும், துணை சுகாதார நிலையங்களுக்குச் சொந்தக் கட்டிடம் கட்டி செவிலியர்கள் தங்கிப் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் அறிவழகன், செயலாளர் மு.சிவக்குமார், பொருளாளர் மு.ஹரி கிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் கா.சக்கரவர்த்தி ஆகியோர் உரை யாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
