கனவு இல்ல திட்டத்தில் முறைகேடு வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
22 Dec 2025, 4:02 am
<p>தருமபுரி, டிச. 22- கலைஞரின் கனவு இல்லத்திட்டத்தில் முறைகேடு செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திற்குட் பட்ட வட்டுவன அள்ளி மற்றும் அஞ்சேஅள்ளி ஊராட்சி களில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் கட்டப் படாத வீட்டிற்கு பில் போட்டு அரசாங்க பணத்தை முறைகேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் ஏழை எளிய தகுதி உடைய மக்களுக்கு வீடு கட்ட நிதி வழங்காமல் பெரிய செல்வந்தர்களுக்கும், அரசு பணியாளர்களுக்கும் வீடு கட்ட நிதி வழங்கி முறை கேடு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள் ளது. இந்த முறைகேட்டிலும், சட்டவிரோத செயலில் ஈடு பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரங்காபுரம் கிளைச் செயலாளர் ஜி.அருண் குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பி.கோவிந்தசாமி, தலைவர் எம்.குறளரசன், பொருளாளர் எம்.அருள் குமார், துணைத்தலைவர் சிலம்பரசன் மற்றும் நிர்வாகி கள் அஜித்குமார், கோவிந்தராஜ், சத்யராஜ், தனுஷ், எஸ்.பாரதி, பிரபு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். இதனையடுத்து, கோரிக்கை மனுவினை ஆட்சி யர் அலுவலகத்தில் அளித்தனர்.</p>
