1 லட்சம் பணியிடங்களை நிரப்பக்கோரி இராமேஸ்வரத்தில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
20 Dec 2025, 2:23 pm
<p><strong>1 லட்சம் பணியிடங்களை நிரப்பக்கோரி இராமேஸ்வரத்தில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>இராமநாதபுரம், டிச.20- 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தி ஒரு லட்சம் அரசு காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகாக்குழு உறுப்பினர் ரூபா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி.மாரிக்குமார், தாலுகா செயலாளர் க.கலைச்செல்வன், தாலுகா தலைவர் ஜே.அஞ்சனா ஆகி யோர் பேசினர். தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்ட துணைச் செயலாளர் தர்ம ராஜ், வழக்கறிஞர் சங்க நிர்வாகி டி.மாரி முத்து, மாதர் சங்க தாலுகா செயலாளர் சுமதி ஆகியோர் ஆதரித்துப் பேசினர். முன் னாள் மாவட்ட பொருளாளர் ஜி.சிவா நிறை வுரையாற்றினார். தாலுகா பொருளாளர் பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
