கள்ளக்குறிச்சியில் சாதிச் சான்றிதழ் கேட்டு வாலிபர் சங்கத்தினர் போராட்டம்
11 Mar 2026, 4:32 pm
<p><strong>கள்ளக்குறிச்சியில் சாதிச் சான்றிதழ் கேட்டு வாலிபர் சங்கத்தினர் போராட்டம்</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, மார்ச் 11- கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பழங்குடி மக்களுக்குச் சாதிச் சான்றிதழ் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சாதிச் சான்றிதழ் கிடைக்காத மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பொதுமக்களோடு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடு பட்டனர். வாலிபர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஆறு.பகத்சிங் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் இ.சதீஷ்குமார், செயலாளர் மு.சிவக்குமார், மாவட்ட நிர்வாகிகள் மு.ஹரி கிருஷ்ணன், க.சக்கரவர்த்தி, ஏ.விஷ்ணு குமார் மற்றும் கிராமப்புற மக்கள் ஏராள மாகக் கலந்து கொண்டு கோரிக்கை அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அளித்தனர்.</p>
