முந்தய பக்கம்

வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

8 Nov 2025, 4:19 pm
வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>கொச்சி, நவ. 8 - எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர். பெங்களூரு வந்தே பாரத் தொடக்கத்தையொட்டி, பள்ளி &nbsp;மாணவர்களைக் கொண்டு ரயிலில் ஆர்எஸ்எஸ் பாட லைப் பாட வைத்ததற்கு கண்ட னம் தெரிவித்து கேரளத்தில் பல்வேறு இடங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டங்களை நடத்தி யது. எர்ணாகுளம் தெற்கு ரயில் நிலையத்தில் பேரணி மற்றும் தர்ணா நடைபெற்றது. இதனை மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.ரஞ்சித் தொடங்கி வைத்துப் பேசினார். அப் போது, &ldquo;தெற்கு ரயில்வே யாருடைய சொத்தும் அல்ல என்றும், ஆர்எஸ்எஸ்-சின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை ஆதரிக்கும் ஒன்றிய அரசு அதிகாரிகளை மக்கள் தெருக் களில் எதிர்கொள்வார்கள்&rdquo; என்று அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட் டத் தலைவர் நிகில் பாபு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே.சி. அருண்குமார் மற்றும் மண்டல இணைச் செயலாளர் விஷ்ணு அனில் ஆகியோர் பேசினர். இதுபோன்று பாலக் காடு, திருவனந்தபுரம் உட்பட பல்வேறு இடங்களில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram