கிரிஸ்டல் நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்ய வாலிபர் சங்கம் மனு
29 Jan 2026, 5:39 pm
<p><strong>கிரிஸ்டல் நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்ய வாலிபர் சங்கம் மனு</strong></p>
<p>சேலம், ஜன.29- சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் நாள்தோறும் பல ஆயி ரக்கணக்கான உள்நோயாளி களும், வெளி நோயாளிக ளும் வந்து செல்கின்றனர். அவர்களின் பாதுகாப்பிற் காகவும், தூய்மைப் பணிக ளுக்காகவும் மாவட்ட நிர்வா கம் சார்பில் கிரிஸ்டல் என்ற நிறுவனத்தின் மூலம் பணியா ளர்களைக் கொண்டு பணிகள் செய்யப்பட்டு வரு கிறது. அப்பணிகளை செய்யும் கிரிஸ்டல் நிறுவன ஊழியர்கள் வரும் நோயாளிகள் மற்றும் உறவி னர்கள் அனைவரையும் தகாத வார்த்தைகளால் திட்டுவது, அடிப்பது, லஞ்சம் கேட்பது போன்ற இழிவான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரு வதாக குற்றச்சாட்டு தெரிவித்து இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்த னர். இதுகுறித்து அம்மனுவில், கிரிஸ்டல் நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து நோயாளிகளிடம் அராஜக முறையில் நடந்து வருகின்றனர். பெண் நோயாளிகளை பாலியல் கிண்டல் செய் வது, மருத்துவமனை வளாகத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட டோல்கேட்டுகளை அமைத்து பணம் வசூலிப்பது, நோயாளிகளை எடுத்து செல்லும் போது பணம் பறிப்பது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலை யில் கடந்த 25 ஆம் தேதி சிறுநீரகப் பிரச்சனை காரணமாக சிகிச்சைக்கு வந்த அனிதா என்ற நோயாளியை எபினேசர் என்ற கிரிஸ்டல் நிறு வன ஊழியர் மது போதையில் தாக்கியது ஸ்கேன் செய்ய அழைத்துச் செல்லும் போது பணம் வாங்கியது தொடர்பாக சமூக வலைத்தளங்க ளில் வீடியோ வைரலாக பதிவானது. மேலும் மருத்துவமனையில் எலிகள், தெரு நாய்கள் அதிகம் உலாவி வருவதால் பாது காப்பு இல்லாத சூழ்நிலை மருத்துவமனை வளா கத்தில் இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கிரிஸ்டல் நிறுவன உரிமையை ரத்து செய்ய வேண்டும். அரசு மேற் பார்வையில் ஊழியர்களை நியமித்து மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளையும் நோயாளி களை காண வரும் உறவினர்களையும் பாது காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.பெரியசாமி தலைமை யில், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டார்வின், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் கோகுல்ராஜ், வாலிபர் சங்க கிழக்கு மாநகர தலை வர் பிரபாகரன், நிர்வாகிகள் வரதராஜ பெருமாள், வித்யா உள்ளிட்ட பலர் பங்கேற்று மனு அளித்தனர்.</p>
