வாலிபர் சங்க உறுப்பினர் பதிவு இயக்கம்
9 Nov 2025, 4:12 pm
<p><strong>வாலிபர் சங்க உறுப்பினர் பதிவு இயக்கம்</strong></p>
<p>திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை பகுதி, மேல்முதலம்மேடு கிளையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உறுப்பினர் பதிவு இயக்கத்தை சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் கோ.அரவிந்தன் துவக்கி வைத்தார். இதில் பகுதி செயலாளர் .ஜெ.த.வசந்த்பௌத்தா, பொருளாளர் ஆ.டிக்சன் பகுதி துணை செயலாளர் சூ.நோவா பகுதி குழு உறுப்பினர் ரா.ஆதித்யா, ரா.பரத்ராஜ், முன்னாள் நிர்வாகி எம்.சி.சீனு ஆகியோர் பங்கேற்றனர். மாவட்டத்தில் பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், ஊத்துக்கோட்டை,கும்மிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.</p>
