முந்தய பக்கம்

ரத்த தானம் செய்து காதலர் தினத்தை கொண்டாடிய வாலிபர் சங்கத்தினர்

15 Feb 2026, 3:03 pm
ரத்த தானம் செய்து காதலர் தினத்தை  கொண்டாடிய வாலிபர் சங்கத்தினர்
<p><strong>ரத்த தானம் செய்து காதலர் தினத்தை &nbsp;கொண்டாடிய வாலிபர் சங்கத்தினர்</strong></p> <p>செங்கல்பட்டு, பிப். 15- செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த பொலம்பாக்கத்தில், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் செங்கல் பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை ரத்த வங்கியுடன் இணைந்து &ldquo;காதலை கொண்டாடுவோம்&rdquo; என்ற &nbsp;தலைப்பில் ரத்ததான முகாம் நடை பெற்றது. காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று &nbsp;(சனிக்கிழமை, பிப். 14) இந்த நெகிழ்ச்சி யான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சித்தாமூர் ஒன்றிய செயலாளர் மு. பிரதாப் தலைமையில் நடைபெற்ற இம்முகா மில், ஒன்றிய பொருளாளர் விஜய் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். வாலிபர் சங்க மத்திய குழு உறுப்பினர் மு. பிரி யங்கா, மாவட்டத் தலைவர் ச. ஜீவா னந்தம், மாவட்ட செயலாளர் இரா. சதீஷ், மாவட்ட பொருளாளர் சுந்தர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் மு. தமிழ் பாரதி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மேலும், வாலிபர் சங்க ரத்ததான கழக பொறுப்பாளர் என். சுரேஷ் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தயாநிதி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவர் அனிதா தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்த சேகரிப்புப் பணிகளை மேற்கொண்டனர். வாலிபர் சங்கத்தினர் உற்சாகத்துடன் பங்கேற்ற இந்த முகாமில், 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram