தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரி வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்

2 Feb 2026, 5:52 pm
அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரி வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்
<p><strong>அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரி வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்</strong></p> <p>திருப்பத்தூர், பிப்.2- அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என சிவராஜ்பேட்டை பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திருப்பத்தூர் நகராட்சி சிவராஜ்பேட்டை பகுதியில் &nbsp;இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கிளை தலைவர் விக்னேஷ் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் சிபிஎம் கட்சியின் தாலுகா செயலாளர் காமராஜ் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். சிவராஜ் பேட்டை பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு கழிவுநீர் கால்வாய்களை முறையாக தூர் வார வேண்டும், டெங்கு மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும், குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்காக செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும், தரமான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும், இளைஞர்களின் நன்மைக்காக விளையாட்டு திடல் உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும், பள்ளி கல்லூரி மற்றும் இளைஞர்களின் அறிவை புகட்டும் வகையில் நூலகம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், தாலுகா தலைவர் தியாக மூர்த்தி, பொருளாளர் கோவிந்தராஜ், &nbsp;மற்றும் நிர்வாகிகள் ஹரிஷ் குமார், &nbsp;ஹரி கிருஷ்ணன், &nbsp;கௌதம் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.