தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம்

19 Dec 2025, 6:05 pm
அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம்
<p><strong>அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம்</strong></p> <p>தருமபுரி, டிச.19- அரசுத்துறைகளில் காலி யாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண் டும் என வலியுறுத்தி வெள் ளியன்று தமிழ்நாடு முழுவ தும் வாலிபர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் காலியாக &nbsp;உள்ள பணியிடங்களை உட னடியாக நிரப்ப வேண்டும். கூட்டுறவு வங்கித்துறை மற் றும் ஊராட்சி செயலாளர் பணி நியமனங்களில் முறை கேட்டை தடுத்து நியாயமாக பணி வழங்க வேண்டும். அரசு &nbsp;மற்றும் தனியார் நிறுவன வேலை வாய்ப்புகள் தமிழக இளைஞர்களுக்கு கிடைக் கும் வகையில் உரிய இட &nbsp;ஒதுக்கீட்டை உருவாக்க வேண்டும். அரசுத் துறைக ளில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்தும் முடி வைக் கைவிட்டு, இளைஞர் களை பணியமர்த்த வேண் டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் வெள்ளியன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக, தரும புரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ம.குறளரசன் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் பி.கோவிந்த சாமி, பொருளாளர் ம.அருள்குமார், நிர்வாகி கள் ராகப்பிரியா, ரவி, பிரவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு காளை மாட்டுச்சிலை அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு, வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் பி.அன்பு ஜனாதி பதி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.சுந்தரராஜன் துவக்கவுரை யாற்றினார். அரசு ஊழியர் சங்க மேனாள் தலைவர் கே.ராஜ்குமார், சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க செய லாளர் பி.கனகராஜ், கட்டுமான சங்க நிர் வாகி வீரபாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த் திப் பேசினர். இதில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் கோட்டை மைதானத்தில் நடை பெற்ற போராட்டத்திற்கு, வாலிபர் சங்க மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் கோகுல் தலைமை வகித்தார். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டார்வின், வாலிபர் சங்க கிழக்கு மாநகர நிர்வாகி கவின்ராஜ் உட் பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை டாடாபாத் பகுதியில் நடை பெற்ற போராட்டத்திற்கு, வாலிபர் சங்க மாவட் டத் தலைவர் என்.ராஜா தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலா ளர் தினேஷ் ராஜா, பொருளாளர் அர்ஜூன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். வங்கி ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர்.மகேஸ்வரன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சுதா, மின் ஊழியர் மத்திய &nbsp;அமைப்பின் மாநிலச் செயலாளர் டி.மணி கண்டன், மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் அகமது ஜூல்பிகர் ஆகியோர் வாழ்த்திப் &nbsp;பேசினர். வாலிபர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் டி.விக்னேஷ் நன்றி கூறினார். திருப்பூர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் அருகே &nbsp;நடைபெற்ற போராட்டத்திற்கு, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் நிருபன் சக்கர வர்த்தி தலைமை வகித்தார். சிஐடியு மாவட் டச் செயலாளர் கே.ரங்கராஜ் துவக்கவுரை யாற்றினார். போக்குவரத்து ஊழியர் சங்க &nbsp;மாவட்ட பொதுச்செயலாளர் கே.கொங்கு ராஜ், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். பானுமதி, மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் மணிகண்டன், தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டத் தலைவர் ஞானசேகரன், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டத் &nbsp;தலைவர் மேகவண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கு.பாலமுரளி, மாநிலக்குழு உறுப்பினர் ரா.சுதா, மாவட்டப் பொருளாளர் க.சிந்தன், இணைச்செயலாளர் சா.பிரவீன் குமார், டிஎன்பிஎஸ்சி மாணவர்கள் ரமேஷ், திவ்யா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வடி வேல், மவுனீஸ், விக்னேஷ், கல்கி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். &nbsp;மாநிலத் தலைவர் செல்வராஜ் நிறைவுரை யாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் ஆ. சந்தோஷ் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.