தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செருகுடி கிராமத்தில் தார்ச் சாலையை தரமாக அமைக்க வாலிபர் சங்கம் கோரிக்கை

13 Dec 2025, 5:13 pm
செருகுடி கிராமத்தில் தார்ச் சாலையை  தரமாக அமைக்க வாலிபர் சங்கம் கோரிக்கை
<p><strong>செருகுடி கிராமத்தில் தார்ச் சாலையை &nbsp;தரமாக அமைக்க வாலிபர் சங்கம் கோரிக்கை</strong></p> <p>கும்பகோணம், டிச.13- &nbsp;தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொத்தங்குடி ஊராட்சி செருகுடி கிராமத்தில், இந்திரா நகரில் சாலை வசதி வேண்டி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பலமுறை போராட்டத்திற்கு முன்வந்த நிலையில், பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் அடிப்படையில் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அப்பகுதியில் 800 மீட்டர் சாலை போடுவதற்கான திட்டம் வகுத்து, 3 மாதங்களுக்கு முன்பு 400 மீட்டர் மட்டும் தார்ச் சாலை அமைத்தது. &nbsp;ஆனால், பொறுப்பற்ற முறையில் தரமற்ற தார்ச் சாலையை போட்டதனால் தற்போது பெய்த மழையில், ஆங்காங்கே சிதலமடைந்து, கருங்கல் ஜல்லியும் &nbsp;காணாமல் போய் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசிற்கு நிதி சுமையையும், மக்களுக்கு பயன்படாத தரமற்ற சாலையையும் போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. ஆகவே கொத்தங்குடி ஊராட்சி செருகுடி இந்திரா நகரில் மீண்டும் தார் சாலையை புதியதாக தரமாக அமைக்க வேண்டியும், விடுபட்ட &nbsp; சாலையையும் சேர்த்து அமைத்துத் தரவேண்டும்&zwnj; என்றும் கோரிக்கை விடுத்தது. &nbsp;இந்நிலையில் சம்பந்தப்பட்ட கொத்தங்குடி ஊராட்சி செயலாளர் அருளை, நேரில் சந்தித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. &nbsp; இந்நிகழ்வில் ஒன்றியச் செயலாளர் வெங்கடேசன், மாவட்டக்குழு உறுப்பினர் சத்திய பிரியன், ஒன்றிய துணைத் தலைவர் அன்பு செல்வம், செம்மங்குடி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.