தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லை போராட்டம் நடத்த வாலிபர் சங்கம் முடிவு

2 Jan 2026, 3:33 pm
அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லை போராட்டம் நடத்த வாலிபர் சங்கம் முடிவு
<p><strong>அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லை போராட்டம் நடத்த வாலிபர் சங்கம் முடிவு</strong></p> <p>சேலம், ஜன.2- சேலம் அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லை தொடர்பாக, அலட்சியப்போக்கு டன் பதிலளித்த மருத்துவமனை முதல்வரை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக வாலிபர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நோயா ளிகள் இருக்கும் இடத்தில் பெருமளவில் எலிகள் தொல்லை இருப்பதாக வீடியோ வைரலானது. இதைத்தொடர்ந்து இந்திய &nbsp;ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வெள்ளி யன்று மருத்துவமனை முதல்வரை சந்தித்து மனு அளிக்க சென்றனர். மனுவை பெற்றுக் கொண்ட மருத்துவக்கல்லூரி முதல்வர் தேவி மீனாள், வாலிபர் சங்க தலைவர்களிடம் பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளார். குறிப்பாக, நோயாளிகள் வெளியிலிருந்து தின்பண்டங்களை எடுத்து வருவதால் எலிகள் வருகிறது; அவர்களை எடுத்து வர வேண்டாம் என வாலிபர் சங்க நிர்வாகிகளே ஒவ்வொரு நோயாளியையும் சந்தித்து தெரி வியுங்கள்; எலி வராது என அலட்சியப்போக் குடன் பதிலளித்துள்ளார். இதனைக் கண்டித்து &nbsp;போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தி னர் தெரிவித்துள்ளனர். மேலும், பொறுப் பற்ற மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் மற்றும் மருத்துவமனை உள்ளேயும், வெளி யேயும் தூய்மைப் பணிகளை மேற்கொள் ளாத பணியாளர்கள் மீதும் தமிழக அரசு உடன டியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றனர். இந்நிகழ்வில், சங்கத்தின் கிழக்கு மாநகரக்குழு தலைவர் பிரபாகரன், செயலா ளர் விமல் குமார், துணைத்தலைவர் வீரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.