கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை 24 மணி நேரம் இயங்க வேண்டும் வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தல்
16 Nov 2025, 3:30 pm
<p><strong>கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை 24 மணி நேரம் இயங்க வேண்டும் வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தல்</strong></p>
<p>திருவள்ளூர்,நவ.16- கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் செயல்படும் அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்க வேண்டும் என வலி யுறுத்தி கும்மிடிப்பூண்டியில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் வட்ட மாநாடு நடை பெற்றது. மாநாட்டிற்கு ராஜேஷ் தலைமை தாங்கி னார். வேலை அறிக்கையை பகுதி செயலா ளர் கே.முனிரத்தினம் சமர்ப்பிக்க, நிர்வாகி வெங்கடாதிரி வாழ்த்திப் பேசினார். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் வி.வினாயக மூர்த்தி மாநாட்டை முடித்து வைத்துப் பேசினார். அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும், மாணவர்கள் நலன் கருதி காலை, மாலை நேரங்களில் கூடுதல் அரசு பேருந்து களை இயக்க வேண்டும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், சிப்காட் தொழிற்சாலையில் உள்ளூர் இளை ஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், விண்ணப்பித்த அனைவருக்கும் குடிமனைப் பட்டா வழங்க வேண்டும், மற்றும் பேருந்து நிலையக் கடைகளைத் திறக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நிர்வாகிகள் தேர்வு தலைவராக தட்சணாமூர்த்தி, செயலாள ராக செல்வா, பொருளாளராக ஏமந்த் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
