வேலையில்லா கால நிவாரணமாக ரூ.5000 வழங்க வேண்டும் புதுச்சேரி அரசுக்கு வாலிபர் சங்க மாநாடு கோரிக்கை
9 Nov 2025, 4:12 pm
<p><strong>வேலையில்லா கால நிவாரணமாக ரூ.5000 வழங்க வேண்டும் புதுச்சேரி அரசுக்கு வாலிபர் சங்க மாநாடு கோரிக்கை</strong></p>
<p>புதுச்சேரி.நவ9- வேலையில்லா கால நிவாரணம் ரூ.5000 வழங்க வேண்டும் என்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் 17-வது மாநில மாநாடு புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள கீர்த்தி மகாலில் ஞாயிறன்று (நவ.9) நடைபெற்றது. மாநாட்டையொட்டி சாரம் ஜீவானந்தம் திடலில் பேரணி நடைபெற்றது. முன்னதாக போதைக்கு எதிரான போராட்ட சுடர், கொடியை முன்னாள் மாநில தலைவர் சரவணன் எடுத்துத் தர மாநிலக்குழு உறுப்பி னர்கள் அஜித்குமார்,ஜெய பிரகாஷ் பெற்றுக்கொண்ட னர். தொடர்ந்து அங்கிருந்து - சுடர் கொடியுடன் பேரணி நடைபெற்றது. மாநாடுக்கு மாநில தலைவர் கெளசிகன், துணை தலைவர் லீலாவதி ஆகியோர் தலைமை குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். முன்ன தாக மாநாட்டு திடலில் மாநாட்டு கொடியை மத்தி யக்குழு உறுப்பினர் ஆனந்த் ஏற்றி வைத்தார். மாநாட்டை துவக்கி வைத்து வாலிபர் சங்கத்தின் மத்திய செயற் குழு ஜெய்க் சி தாமஸ் பேசி னார். மாநாட்டை வாழ்த்தி இந்திய மாணவர் சங்கத் தின் மாநில செயலாளர் பிரவீன் குமார் பேசினார். தொடர்ந்து நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் செயலாளர் சஞ்சய்சேகரன் வேலை அறிக்கை சமர்பித் தார். வரவு செலவு அறிக்கை பொருளாளர் ரஞ்சித்குமார் தாக்கல் செய்தார். பிரதிநிதி கள் விவாதத்திற்கு பிறகு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் இறுதியாக சங்கத்தின் அகில இந்திய தலைவர் மக்களவை உறுப்பினர் ஏஏ. ரஹீம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். நிர்வாகி கள் ஜெய ராஜ்,விண்ண ரசன், கவியரசன்,வினோத் குமார்சிந்து, ஸ்ரீதர், நிலவழ கன் உள்ளிட்ட திரளானோர் மாநாட்டில் பங்கேற்றனர். புதிய நிர்வாகிகள் மாநாட்டில் புதிய தலை வராக கௌசிகன், செயலாள ராக சஞ்சய் சேகரன், பொருளாளராக ரஞ்சித் குமார் உள்ளிட்ட 19 பேர் கொண்ட புதிய மாநில குழு தேர்வு செய்யப்பட்டது. தீர்மானங்கள் மாநாட்டில் புதுச்சேரி யில் புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்க ஆட்சியா ளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா உட்பட போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை யில்லா கால நிவாரணமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்கு றுதிகளான ஐடி, ஜவுளி பூங்காவை அமைத்து, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலி யாக உள்ள 10 ஆயிரம் இடங்களை நிரப்ப வேண்டும். அரசு பணிக்கு வயது தளர்வு அளிக்க வேண்டும். தாய்வழி கல்வியை உறுதிபடுத்த வேண்டும். ஏ.எப்டி.. கதேசி. பாரதி மில்களை மூடும் முடிவை கைவிட்டு, நிதி ஒதுக்கி புனரமைத்து நடத்த வேண்டும். தொழிற்சாலை நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்க 80 விழுக்காடு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்ப ட்டது.</p>
