தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்கள் ஒற்றுமையை சிதைக்கும் பாஜகவிற்கு வாலிபர் சங்கம் கண்டனம்

13 Jan 2026, 3:17 pm
மக்கள் ஒற்றுமையை சிதைக்கும் பாஜகவிற்கு வாலிபர் சங்கம் கண்டனம்
<p><strong>மக்கள் ஒற்றுமையை சிதைக்கும் பாஜகவிற்கு வாலிபர் சங்கம் கண்டனம்</strong></p> <p>கோவை, ஜன.13- சிறுபான்மை மக்களோடு இந்துக்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடுவதா? என்று பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசனின் விஷமக் கருத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. கோவையில் பாஜக சார்பில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், ஒவ் வொரு பண்டிகையும் இந்திய கலாச்சாரத்து டன் பின்னிப்பிணைந்தது என்றும், பொங்கல் விழாவை சிறுபான்மை மக்களோடு சேர்ந்து &nbsp;சமத்துவ பொங்கல் என்ற விழாவை கொண் டாடுகிறார். அதுவும் இல்லாத ஒன்றை முதல் வர் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். சிறு பான்மை மத மக்கள் அவர்களுடைய பண்டி கைகளை கொண்டாடுகிறார்கள், ஆனால் தமிழகத்திலே இல்லாத ஒன்றாக பொங்கலை கொண்டாடாத ஒரு சமுதாயத்தோடு சேர்த்து வைத்து இந்து மக்களை ஏமாற்று வதற்காக சமத்துவ பொங்கல் என்ற ஒன்றை &nbsp;கொண்டாடிக் கொண்டிருக்கிறார் முதல்வர் என விஷமத்தனமாக பேசினார். &nbsp;இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன்தொடர்ச்சி யாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோவை மாவட்டக்குழு வானதியின் பேச் சுக்கு கடுமையான கண்டனத்தை தெரி வித்துள்ளது. &nbsp;இதுகுறித்து இச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகை என்பது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வியலோடு இணைந்து ஒரு பண்பாட்டு விழாவாகும். குறிப்பாக உழவுத் தொழிலில் ஈடுபடும் மக்க ளின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்து இந்த &nbsp;விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் காலங் காலமாக சாதி, மத வேறுபாடுகளை தாண்டி &nbsp;சமத்துவ பொங்கல் வெகு சிறப்பாக கொண் டாடப்பட்டு வரும் நிலையில், பாஜக சட்ட மன்ற உறுப்பினர் மக்களின் ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் வகை யில் பேசியுள்ளார். இதனை வாலிபர் சங்கம் &nbsp;வன்மையாக கண்டிக்கிறது என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.