மாமல்லபுரம் கடற்கரையை சுத்தம் செய்த வாலிபர் சங்கத்தினர்
9 Mar 2026, 4:24 pm
<p><strong>மாமல்லபுரம் கடற்கரையை சுத்தம் செய்த வாலிபர் சங்கத்தினர்</strong></p>
<p>மாமல்லபுரம், மார்ச் 9- செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரையில், மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச் 3 முதல் 5-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த இருளர் இன மக்கள் திரண்ட னர். கடற்கரையில் தற்காலிகக் குடில்கள் அமைத்துத் தங்கியிருந்து தங்களது பாரம்பரிய வழிபாடுகளை முடித்துக் கொண்டு அவர்கள் ஊர் திரும்பினர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் அதிகளவில் தேங்கியிருந்தன. இந்தக் கழிவுகள் கடலில் கலந்து கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் நிலவியது. இதனைத் தடுத்திடும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தைச் சேர்ந்த இளைஞர்கள் களம் இறங்கினர். மாமல்ல புரம் நகராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்பு டன் கடற்கரை முழுவதும் சிதறிக் கிடந்த குப்பை கழிவுகளை அகற்றித் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். வாலிபர் சங்கத்தினரின் இந்தச் செயல் கடற்கரையைப் பொலிவு பெறச் செய்ததுடன், பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.இந்நிகழ்ச்சியில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இரா.சதீஷ் மாவட்டப் பொரு ளாளர் சுந்தர், திருக்கழுக்குன்றம் ஒன்றிய தலைவர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
